Published:Updated:

`10 வயது சிறுமிக்கு 51 வயது நபரால் நேர்ந்த கொடுமை!' - ஒரே நாளில் பதிவான இரு போக்சோ வழக்குகள்!

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

சென்னையில் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி அவரை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியைக் காணவில்லை என அவரின் அம்மா, கடந்த 25.8.2021-ம் தேதி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் `சிறுமி மாயம்’ என வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்ற தகவல் தெரியவந்தது. அதனால் இளைஞரையும் சிறுமியையும் போலீஸார் தேடிவந்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்தநிலையில் இருவரும் இருக்கும் இடம் குறித்த தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இளைஞரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் மணிகண்டன் (24) எனத் தெரிந்தது. கண்ணகி நகரைச் சேர்ந்த மணிகண்டன், சிறுமியைக் காதலித்திருக்கிறார். அவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் மணிகண்டனை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொரு வழக்கு:

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் பெண்ணின் மகளுக்கு 10 வயது. அந்தப் பெண் வேலைக்குச் சென்ற பிறகு தனியாக அவரின் 10 வயது மகள் வீட்டில் இருந்திருக்கிறாள். அப்போது சிறுமிக்கு அறிமுகமான துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த மனோகரன் (51) என்பவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image
சென்னை: குளிர்பானத்தில் மது; பெற்ற மகளுக்குப் பாலியல் தொல்லை! - தந்தை, சித்தி கைது

இது குறித்து சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் அம்மா, கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியிடமும் மனோகரனிடமும் விசாரணை நடத்தினர். சிறுமி அளித்த தகவலின்படி மனோகரனை போலீஸார் கைதுசெய்தனர். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு