Published:Updated:

சென்னை: 'காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன்'! - மிரட்டிய காதலன்;சிக்கிய நண்பன்!

காதல் (சித்திரிப்பு படம்)
காதல் (சித்திரிப்பு படம்)

சென்னையில் காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் எனக் காதலியை மிரட்டிய காதலனையும், அவரின் நண்பனையும் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சுந்தரி (24), (பெயர் மாற்றம்). இவர் சென்னையில் தங்கி பாடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். அதே நிறுவனத்தில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தகுமார் (21) என்பவரும் வேலை பார்த்துவந்தார். ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் சுந்தரிக்கும் அரவிந்தகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் சேர்ந்து புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.

சென்னை: பிரிந்துபோன காதல் கணவர்; ஆண் நண்பரின் சந்தேகம்! - கொலை செய்யப்பட்ட பெண்!நடந்தது என்ன?
காதல்
காதல்

இந்தச் சூழலில் அரவிந்தகுமாரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அதனால் அரவிந்தகுமாருடன் பேசுவதை சுந்தரி தவிர்த்திருக்கிறார். அதன் காரணமாக காதலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்தகுமார், காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய நண்பர் தனபால் (19) என்பவர் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். புகைப்படங்களை வெளியிடாமலிருக்க இருவரும் சுந்தரியிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுந்தரி, குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடனடியாக சுந்தரியின் அப்பா, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் அரவிந்தகுமார், அவரின் நண்பர் தனபால் இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு