Published:Updated:

சென்னை: `ஒருதலைக் காதல்' - சீரியல் நடிகைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநர் கைது

நடிகைக்கு டார்ச்சர் கொடுத்ததாகக் கைதான இயக்குநர் ரஞ்சித்
நடிகைக்கு டார்ச்சர் கொடுத்ததாகக் கைதான இயக்குநர் ரஞ்சித்

சென்னையில் வெப் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரைப் பகுதியிலுள்ள தனியார் ரிசார்ட்டில், கடந்த 15-ம் தேதி வெப் சீரியல் ஷூட்டிங் நடந்தது. இந்த சீரியலில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு சீரியலில் கதாநாயகியாக 22 வயதான இளம்பெண் நடித்தார். இந்த சீரியலை சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (25) என்பவர் இயக்கினார். ரிசார்ட்டில் படிப்பிடிப்பு நடந்தபோது கதாநாயகியை இயக்குநர் ரஞ்சித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image

இதையடுத்து கதாநாயகி, கானத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிந்து இயக்குநர் ரஞ்சித்திடம் விசாரித்தார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கானத்தூர் போலீஸார் கூறுகையில், ``கதாநாயகியை இயக்குநர் ரஞ்சித் ஒருதலையாகக் காதலித்திருக்கிறார். தன்னுடைய காதலை அவரிடம் கூறியபோது அதைக் கதாநாயகி ஏற்க மறுத்துவிட்டார். அதனால், தன் காதலை நிரூபிக்க தன் கையில் இரும்புக்கம்பியால் கதாநாயகியின் பெயரை எழுதியிருக்கிறார் ரஞ்சித். ரத்தம் சொட்டச் சொட்ட அதை கதாநாயகியிடம் காண்பித்திருக்கிறார். அதன் பிறகும் அவர் ரஞ்சித்தைக் காதலிக்கவில்லை. ரஞ்சித்தின் இது போன்ற செயல்களைக் கதாநாயகி கண்டித்திருக்கிறார். ஆனால், இயக்குநர் ரஞ்சித்தின் நடவடிக்கைகள் மாறவில்லை.

இந்தச் சமயத்தில் ரிசார்ட்டில் நடந்த படப்பிடிப்பின்போது ரஞ்சித், கதாநாயகியிடம் தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இயக்குநர் ரஞ்சித்தோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், கதாநாயகியை ஷூட்டிங் ஸ்பாட்டில்வைத்தே தாக்கியதோடு, பாலியல்ரீதியாகவும் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த கதாநாயகி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போன் ஆடியோவால் கைதான ஹேமந்த் - நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்?
கைது
கைது
representational image

அதன்பேரில் ரஞ்சித்திடம் விசாரித்தபோதுதான் இந்தத் தகவல்கள் தெரியவந்தன. இதையடுத்து ரஞ்சித்தைக் கைதுசெய்து கொரோனா பரிசோதனைக்குப் பிறகு அவரைச் சிறையில் அடைத்திருக்கிறோம். ரஞ்சித் மீது 294b, 323, பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகிய மூன்று பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்" என்றனர்.

சீரியலில் நடித்த கதாநாயகிக்கு இயக்குநர் ரஞ்சித் கொடுத்த டார்ச்சர் தொடர்பான ஆதாரங்கள் அவரின் செல்போனில் இருந்திருக்கின்றன. அந்த செல்போனில்தான் கதாநாயகியின் பெயரை ரஞ்சித் தன் கையில் பச்சைகுத்திய புகைப்படங்களும் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த ஆதாரங்கள் போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமலிருக்க, ரஞ்சித் செல்போனை தூக்கி எறிந்து உடைத்திருக்கிறார். தற்போது அந்த போனிலிருக்கும் ஆதாரங்களை போலீஸார் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

நடிகை சித்ரா வழக்கு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஷூட்டிங்கிலேயே வெப் சீரியல் கதாநாயகிக்கு இயக்குநரால் ஏற்பட்ட தொல்லை, சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு