Published:Updated:

வழக்கறிஞர் டிரெஸ்; வசீகரிக்கும் குரல்; மோசடி வழக்கில் கைதான குமரி மாவட்டப் பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோசடி வழக்கில் கைதான  ஸ்டெபி
மோசடி வழக்கில் கைதான ஸ்டெபி

சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாகத் துப்பரவு பணி செய்துவருபவர்களிடம் பேச்சுக் கொடுக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஸ்டெபி, பணி நிரந்தரம் செய்துதருவதாகக் கூறிப் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, சேலையூரைச் சேர்ந்தவர் பூபதி (55). இவர் துப்பரவு பணியாளராகப் பணியாற்றிவருகிறார். இவரிடம் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், துப்பரவுப் பணியாளர் பணியை நிரந்தரம் செய்துதருவதாகக் கூறி சென்னை புழுதிவாக்கத்தில் குடியிருந்த ஸ்டெபி என்கிற ஸ்டெல்லா என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அப்போது ஸ்டெபி, தன்னை வழக்கறிஞர் என்று பூபதியிடம் கூறியிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

அதை நம்பவைக்க வழக்கறிஞரின் உடையணிந்திருக்கும் போட்டோவைக் காட்டியிருக்கிறார். அதோடு தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் எளிதில் வேலை வாங்கித் தர முடியும் என பூபதியிடம் கூறியிருக்கிறார். அதை நம்பிய பூபதியும், பணி நிரந்தரத்துக்காகப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். பூபதி மூலம் இந்தத் தகவல் தற்காலிகமாகத் துப்பரவு வேலை செய்து வருபவர்களுக்குத் தெரியவந்தது. அவர்களும் ஸ்டெபியை அணுகி, தங்களுக்கும் வேலையை நிரந்தரம் செய்துதரும்படி கூறியிருக்கின்றனர். அவர்களிடமெல்லாம் ஸ்டெபி, நேரிடையாகவும் வங்கிக் கணக்கு மூலமாகவும் பணம் வசூலித்திருக்கிறார். ஆனால், யாருக்கும் வேலையும் பணிநிரந்தரமும் செய்து கொடுக்கவில்லை. அதனால் பணம் கொடுத்தவர்கள் ஸ்டெபியிடம் கேட்கத் தொடங்கினர்.

சென்னை: ஐ.சி.எஃப்-ல் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி; 7 பேர் கைதான பின்னணி!

இதையடுத்து ஸ்டெபி, சென்னையில் தங்கியிருந்த வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். அதனால் பணம் கொடுத்தவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, வேலைவாய்ப்பு மோசடி பிரிவின் இன்ஸ்பெக்டர் ரெஜினா, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஸ்டெபி பயன்படுத்திய செல்போன் நம்பரைவைத்து அவரை போலீஸார் தேடியபோது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் ஸ்டெபி, திண்டிவனத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் ஸ்டெபியைக் கைதுசெய்து சென்னைக்கு அழைத்துவந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மோசடி  வழக்கில் கைதான  ஸ்டெபி
மோசடி வழக்கில் கைதான ஸ்டெபி
``சுல்தானின் கிரீடம் விற்றதில் ரூ.70,000 கோடி வரவிருக்கிறது"- `மோசடி' மோன்சன் மாவுங்கல் கைது!

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாகத் துப்பரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் புழுதிவாக்கம் பகுதியில் ஸ்டெபி குடியிருந்தபோது அன்பாகவும் அக்கறையாகவும் பழகியிருக்கிறார். ஸ்டெபியின் வசீகரமான பேச்சாலும், அவரின் நடவடிக்கைகளைப் பார்த்தும் துப்பரவுப் பணியாளர்கள், ஸ்டெபி முழுமையாக நம்பியிருக்கின்றனர். துப்பரவுப் பணியாளர்களிடம் தன்னை வழக்கறிஞர் என்று கூறிய ஸ்டெபி, மாநகராட்சியில் அவர்களுடைய வேலையை நிரந்தரம் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். அதோடு, சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் பணிகளையும் தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும். அதற்கு மாநகராட்சியிலுள்ள அதிகாரிகள் தனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்பியவர்களிடமிருந்து தலா 5,10,000 ரூபாய் வீதம் 1,18,00,45,000 ரூபாய் வரை வசூலித்ததாக 35 பேர் புகாரளித்தனர். அதன்பேரில் ஸ்டெபி மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடினோம். அவரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி என்பதால் அங்கு சென்று விசாரித்தோம். ஆனால் அவர் அங்கு இல்லை. அதன் பிறகு ஸ்டெபி குறித்துப் பல இடங்களில் விசாரித்தபோது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் ஸ்டெபி திண்டிவனத்தில் பதுங்கியிருந்தார். அங்கு சென்று அவரைக் கைதுசெய்தோம். அவரிடமிருந்து 90,000 ரூபாயையும், 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்திருக்கிறோம். ஸ்டெபி, வழக்கறிஞர் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் டிகிரி படித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஸ்டெபியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு