Published:Updated:

சென்னை: 'உணவு டெலிவரி செய்த இளைஞர் பைக் திருடனாக மாறிய பின்னணி!

டெலிவரி
டெலிவரி

சென்னையில் உணவு டெலிவரி வேலை செய்து வந்த இளைஞன், பைக் திருட்டில் ஈடுபட்டு போலீஸரால் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் விலை உயர்ந்த பைக்குகள் திருட்டுப் போனது. அதுதொடர்பாக பைக்கின் உரிமையாளர்கள், காவல் நிலையங்களில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் பைக்குகள் திருடப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது உணவு டெலிவரி செய்யும் சீருடை அணிந்த இளைஞர் ஒருவர் பைக்கை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பைக் திருட்டில் ஒரே இளைஞர் ஈடுபடுவதை சிசிடிவி கேமரா பதிவின் மூலம் போலீஸார் உறுதி செய்தனர்.

சிசிடிவி
சிசிடிவி

இதையடுத்து அந்த இளைஞரை போலீஸார் தேடிவந்தனர். கொரோனா ஊரடங்கையொட்டி அம்பத்தூர் போலீஸார், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்த இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது இளைஞர், ஓட்டி வந்த பைக்குக்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து இளைஞனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், ``வாகனச் சோதனையில் பிடிப்பட்ட இளைஞர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் (21) எனத் தெரியவந்தது. இவர் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்திருக்கிறார். அப்போது இவர் ஒரு பெண்ணை விரும்பியிருக்கிறார். அவரிடம் பந்தா காட்ட திட்டமிட்டிருக்கிறார். ஆனால் ஆன் லைன் டெலிவரி மூலம் ஜோசப்பிற்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை.

`பூட்டை உடைக்காமல் பைக் திருட்டு; மெக்கானிக் ஷெட்டாக மாறிய வீடு!' -தடம் மாறிய சென்னை இன்ஜினீயர்
 இளைஞர் ஜோசப்
இளைஞர் ஜோசப்

அதனால் ஜோசப், பணம் சம்பாதிக்க தன்னுடைய நண்பர் ஒருவருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது இருவரும் சேர்ந்து பைக்குகளைத் திருட முடிவு செய்தனர். இதையடுத்து உணவு டெலிவரி செய்ய ஜோசப் செல்லும் இடங்களில் பைக்குகளை நோட்டமிடுவார். பின்னர் நண்பனுடனும் தனியாகவும் சென்று பைக்குகளைத் திருடி இணையதளம் மூலம் விற்று வந்திருக்கிறார். பைக்குகளாக விற்றால் போலீஸிடம் சிக்கிக் கொள்வோம் எனக்கருதிய ஜோசப், உதிரிபாகங்களாகவும் விற்று வந்திருக்கிறார். ஜோசப் வீட்டிலிருந்து 7 பைக்குகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஜோசப்பும் அவரின் நண்பனும் சேர்ந்து 20-க்கும் மேற்பட்ட பைக்குகளைத் திருடியதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஜோசப்பின் நண்பனைப் பிடித்தால் மட்டுமே பைக்குகள் திருடப்பட்ட விவரம் தெரியவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு