சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்துவருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரின் குடும்பத்தினருக்கு அறிமுகமான மயிலாப்பூரைச் சேர்ந்த அஜித் (24) என்ற இளைஞர், அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அஜித் வந்திருக்கிறார். அப்போது அவர் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதை வெளியில் சொல்லக் கூடாது என்று அஜித் மிரட்டியிருக்கிறார். அதன் பிறகு அவர் வீட்டவிட்டுச் சென்றுவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தனக்கு நடந்த கொடுமைகளை அந்தப் பெண், அவரின் அம்மாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் அம்மா, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாளித்தார். போலீஸாரால், வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் காவல் துறையினருடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கம் தரப்பில் காவல்துறை உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசப்பட்டது. இதையடுத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அஜித்தை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.