Published:Updated:

பகலில் அலுவலக வேலை; இரவில் உணவு டெலிவரியோடு செயின்பறிப்பு - புதுமாப்பிள்ளை சிக்கியது எப்படி?

கைதான புதுமாப்பிள்ளை
News
கைதான புதுமாப்பிள்ளை

யோகேஷ், பகல் நேரத்தில் அலுவலகங்களிலும் இரவு நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையையும் செய்துவருகிறார். இந்த இரண்டு வேலைகள் மூலம் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி ( 57). இவர், சென்னை அண்ணா நகரில் குடியிருந்துவருகிறார். இவரின் மகள் புவனேஷ்வரி, 26. இவர் அதேபகுதியில், பேன்சி கடையில் வேலை செய்கிறார். கடந்த 7-ம் தேதி, வழக்கம்போல புவனேஸ்வரி வேலைக்கு சென்று விட்டு, அண்ணாநகர், பகுதியில் தனியாக நடந்து வந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர், புவனேஸ்வரி கழுத்திலிருந்த, ஒரு சவரன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பினார். அதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி, அண்ணாநகர் குற்றப்பிரிவில் புகாரளித்தார்.அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது உணவு டெலிவரி செய்யும் பணியாளர் ஒருவர்தான் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

 யோகேஷ்
யோகேஷ்

இதையடுத்து அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது அவரின் பெயர் யோகேஷ் (29). சென்னை அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து யோகேஷிடம் போலீஸார் விசாரித்தபோது அவர்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து யோகேஷை போலீஸார் கைது செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், யோகேஷிக்கு சில வாரங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவரின் மனைவிக்கு தாலியை பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். யோகேஷ், பகல் நேரத்தில் அலுவலகங்களிலும், இரவு நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையையும் செய்துவருகிறார். இந்த இரண்டு வேலைகள் மூலம் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் தங்கம் தேவைப்பட்டுள்ளது.

கைது
கைது

அதனால், தெரிந்தவர்களிடம் யோகேஷ் கடனாக பணம் கேட்டுள்ளார். யாரும் கொடுக்காததால் தனியாக நடந்துச் சென்ற புவனேஸ்வரியிடமிருந்து செயினைப் பறித்து விட்டு தப்பிச் சென்றிருக்கிறார். முதல் தடவையாக இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட யோகேஷை 50 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பிடித்துவிட்டோம். யோகேஷ், செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தெரிந்து அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர் என்றனர்.