Published:Updated:

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் டைம்டேபிள் போட்டுத் திருடிய இளைஞர் - போலீஸில் சிக்கியது எப்படி?!

தமிழ்செல்வன்

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களிடமிருந்து லேப்டாப்களைத் திருடிய கொள்ளையனை, சென்னை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் டைம்டேபிள் போட்டுத் திருடிய இளைஞர் - போலீஸில் சிக்கியது எப்படி?!

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களிடமிருந்து லேப்டாப்களைத் திருடிய கொள்ளையனை, சென்னை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
தமிழ்செல்வன்

சென்னை ராயபுரம் பகுதியிலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில், விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் தங்கி, பயின்றுவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவரின் லேப்டாப் சமீபத்தில் திருடப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

லேப்டாப் திருடிய இளைஞர்
லேப்டாப் திருடிய இளைஞர்

ஆய்வு நடத்தியதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லேப்டாப்பைத் திருடிச் செல்வது கண்டறியப்பட்டது. திருடிச் செல்லும் நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். அப்போது, ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (25) என்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளில் இருந்தவரின் உருவமும், இவரின் உருவமும் ஒத்துப்போக, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வனுக்குத் தாய், தந்தை இல்லை. டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்திருக்கிறார். மேலும், அந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவரின் லேப்டாப்பைத் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரைக் காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் காதல் தோல்வியில் முடிந்துள்ளது.

லேப்டாப் திருடிய இளைஞர்
லேப்டாப் திருடிய இளைஞர்

அந்த ஆத்திரத்தில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களின் லேப்டாப்களைத் திருடிவந்திருக்கிறார். இதற்காக, காலண்டரில் தனியாக ஓர் அட்டவணை போட்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று லேப்டாப்களைத் திருடிவந்திருக்கிறார். திருடும் லேப்டாப்களை இணையதளத்தில் இவர் விற்பனை செய்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. செம்மஞ்சேரி பகுதியில் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த வீட்டிலிருந்து திருடிவைத்திருந்த 31 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த தமிழ்ச்செல்வனை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism