Published:Updated:

பகலில் பேக்கரி வேலை; இரவில் செருப்பு திருட்டு; வடமாநில இளைஞர்களைச் சிக்கவைத்த சிசிடிவி!

இளைஞர்கள் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் புதிய செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடிவந்த இளைஞர்களை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

பகலில் பேக்கரி வேலை; இரவில் செருப்பு திருட்டு; வடமாநில இளைஞர்களைச் சிக்கவைத்த சிசிடிவி!

சென்னை புறநகர் பகுதிகளில் புதிய செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடிவந்த இளைஞர்களை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:
இளைஞர்கள் கைது

சென்னை தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தொடர்ந்து செருப்புகள் களவு போயின. ஆரம்பத்தில் அதை அந்தப் பகுதி மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ந்து புத்தம் புதிய செருப்புகள் மட்டும் மாயமானதால் அந்தப் பகுதி மக்களுக்குச் சந்தேகம் எழுந்தது. உடனடியாக வீடுகளின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பொதுமக்கள் ஆய்வுசெய்தனர். அப்போது அரைநிர்வாணத்தில் இளைஞர் ஒருவர், செருப்புகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. உடனடியாக செருப்புகள் திருடப்படுவது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதையடுத்து, சிசிடிவி ஆதாரங்களை வைத்து, செருப்புகளைத் திருடும் இளைஞரைப் பிடிக்க போலீஸார் முடிவுசெய்தனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இந்த நிலையில் செருப்புகளைத் திருடிய இளைஞர், அதை பல்லாவரம் வாரச்சந்தையில் விற்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தாம்பரம் கேம்ப்ரோடு பகுதியிலுள்ள பேக்கிரி கடையில் வேலைபார்த்துவரும் வடமாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர்தான் செருப்புத் திருட்டுக்கு மூளையாக இருந்தது தெரியவந்தது. விகாஸ் குமாருக்கு செருப்புகளைத் திருடிக் கொடுத்தது ரோஹித் குமார், அருள் எப்ரின் ஆகிய இருவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூன்று பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த சில மாதங்களாக இந்தக் கும்பல் புத்தம் புதிய செருப்புகளைத் திருடி பல்லாவரம் வாரச்சந்தையில் குறைந்த விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 300 ஜோடி செருப்புகளைப் பறிமுதல் செய்தனர். கைதான மூன்று பேர்மீதும் திருட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டு, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி சிறையில் அடைத்தனர்.