Published:Updated:

`சிறுமிக்கு காதல் வலை; 7 நாள்களுக்குப் பிறகு மீட்பு!' - விசாரணையில் சிக்கிய சென்னை இளைஞர்

சிறுமி கடத்தல்
சிறுமி கடத்தல் ( மாதிரி படம் )

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய இளைஞர், அவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தியுள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அமுல் என்பவர், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``என்னுடைய 14- வயது மகள், கடந்த 2.6.2020 முதல் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும். மேலும், என் மகளைக் கடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 14 வயது சிறுமிக்கு திருமண ஆசைவார்த்தை கூறி அவரைக் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு 9.6.2020-ல் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

காதல்
காதல்
Representational image
`காதலனை நம்ப வைத்தால் திருமணம்’ - குழந்தை கடத்தல் விவகாரத்தில் திருப்பத்தூரைப் பதறவைத்த இளம்பெண்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவின்பேரில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் சிறுமி, சென்னை பெரும்பாக்கம், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு 57-வது பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இருக்கும் தகவல் கிடைத்தது. சிறுமியை பத்திரமாக மீட்பது தொடர்பாக துணை கமிஷனர் ஜெயலட்சுமி, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸாருடன் ஆலோசித்தார்.

பின்னர், சிறுமியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பெரும்பாக்கத்துக்குச் சென்றனர். அங்கு விசாரித்தபோது, சிறுமி யாரும் அங்கு வரவில்லை என அங்குள்ளவர்கள் கூறினர். அதனால் போலீஸார், தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி குறிப்பிட்ட ஒருவீட்டின் கதவைத் தட்டினர். அப்போது, பூட்டிய வீட்டுக்குள் சிறுமி இருந்தது தெரியவந்தது. அவரை மீட்டு, காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துவந்தனர்.

கடத்தல்
கடத்தல்

பின்னர் சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர் நடந்த சம்பவத்தைக் கூறினார். மேலும், தன்னை அழைத்துச்சென்ற பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சக்தி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறினார். அதற்கு போலீஸார் சம்மதிப்பது போல நடித்தனர். சிறுமி மூலம் சக்தியை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போது சக்தியும், சிறுமியை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் கூறினார்.

அதைக் கேட்ட போலீஸார், சக்தியிடம் சிறுமிக்கு இன்னும் 18 வயதாகவில்லை. அதனால் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினர். ஆனால், அவருக்கு சிறுமியைப் பிரிய மனமில்லை. இதையடுத்து, இருவரிடமும் தனித்தனியாக போலீஸார் விசாரித்தனர். அப்போது சிறுமியிடம், போலீஸாரும் அவரின் பெற்றோரும் பேசி நிலைமையை விளக்கினர். அதனால் சிறுமி பெற்றோருடன் செல்ல சம்மதித்தார்.

`சிறுமிக்கு காதல் வலை; 7 நாள்களுக்குப் பிறகு மீட்பு!' - விசாரணையில் சிக்கிய சென்னை இளைஞர்
`செல்லப்பிராணிகள் கடைக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!’ - போக்ஸோவில் கைதான  சென்னை இளைஞர்

போலீஸ் விசாரணையில் சிறுமி, தன்னைக் காதலிப்பதாகக் கூறிய சக்தி, திருமண ஆசைவார்த்தையைக் கூறி நெருக்கமாக இருந்ததுள்ளார் என்று கூறியுள்ளார். இதையடுத்து சக்தியை போலீஸார் கைதுசெய்து அவர்மீது போக்ஸோ, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து வில்லிவாக்கம் மகளிர் போலீஸார் கூறுகையில், ``சிறுமியைக் காணவில்லை என்று கூறித்தான் அவரின் பெற்றோர் புகாரளித்தனர். அதை விசாரித்தபோதுதான் சிறுமியைக் கடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. செல்போன் சிக்னல் மற்றும் ரகசியத் தகவல் மூலம் சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளோம். அவரைக் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் சக்தியைக் கைது செய்துள்ளோம்"என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு