Published:Updated:

சென்னை: மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு நடந்த கொடுமை - பல்கலைக்கழக ஊழியர் கைது!

கைது
News
கைது

சென்னையிலுள்ள பல்கலைக்கழகத்தில் உதவியாளராகப் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக ஊழியர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சுந்தரி (பெயர் மாற்றம்) (30) என்பவர் குடியிருந்துவருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், சென்னையிலுள்ள பல்கலைக்கழகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் அருண்கிஷோர். (32). இவரும் சுந்தரி வேலை பார்க்கும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார். அதனால் இவர்கள் இருவரும் நட்பாகப் பழகிவந்திருக்கின்றனர். பின்னர் சுந்தரியை அருண்கிஷோர் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்!' என சுந்தரியிடம் ஆசைவார்த்தைகளை அருண்கிஷோர் கூறியிருக்கிறார். அதை நம்பிய சுந்தரி அவருடன் தொடர்ந்து பழகிவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு சுந்தரியின் வீட்டுக்கு அருண்கிஷோர் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுந்தரியை அருண்கிஷோர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சுந்தரியை அருண்கிஷோர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து சுந்தரி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார் அருண்கிஷோரைக் கைதுசெய்தனர்.