Published:Updated:

``நான் ஓபிஎஸ்-ன் அண்ணன் மகன்’’ - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் கைது: பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோசடி வழக்கில் கைதான மதனகோபால்
மோசடி வழக்கில் கைதான மதனகோபால்

"நான், ஓ.பன்னீர்செல்வத்தின் அண்ணன் மகன்" எனக் கூறி, அமைச்சர் கோட்டாவில் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த மதனகோபால் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி கமலக்கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள். இவர்கள் இருவரும் அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் 2016-ம் ஆண்டு, கமலக்கண்ணனுக்கு மாதவரத்தை சேர்ந்த மதனகோபால் என்பவர் அறிமுகமானார். இவர், தன்னை முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அண்ணன் மகன் என தெரிவித்திருக்கிறார். அதை உண்மையென கமலக்கண்ணும் நம்பியிருக்கிறார்.

FRAUD
FRAUD
representational image

இதையடுத்து அமைச்சர் கோட்டாவில் உங்களின் மகள்களுக்கு தலைமைச் செயலகத்தில் உதவியாளர் வேலையையும் மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் வேலையையும் வாங்கித் தருகிறேன் என கமலக்கண்ணனிடம் மதனகோபால் கூறியிருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறிய மதனகோபால், கமலக்கண்ணனிடமிருந்து 44 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார். போலி நியமன ஆர்டரையும் மதனகோபால் கொடுதிருக்கிறார்.

தொழிலதிபரிடம் முகநூலில் பழகி மோசடி! - அனுதாபம் மூலம் ரூ.1.1 கோடி பறித்த தாய், மகள்

அதை வாங்கிக் கொண்டு வேலையில் சேர கமலக்கண்ணனின் மகள், தலைமைச் செயலகத்துக்குச் சென்றார். அப்போதுதான் அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது. மதனகோபால் கொடுத்த ஆர்டர் போலி எனத் தெரியவந்தது. இதுகுறித்து மதனகோபாலிடம் கமலக்கண்ணன் கேட்டிருக்கிறார். அதற்கு மழுப்பலான பதிலைக் கூறிய மதனகோபால், அதன்பிறகு தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கமலக்கண்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

விசாரணையில் கமலக்கண்ணனை மதனகோபால் ஏமாற்றியது உண்மையென தெரியவந்தது. அதனால் மதனகோபாலை போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆங்காடு, புதூர் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து போலி அரசு முத்திரைகள், போலியான நியமன கடிதங்கள், மோசடி செய்த பணத்தில் வாங்கிய 5 சவரன் தங்க நகைகள், ஒரு லேப்டாப், 2 செல்போன்கள், ரூ63,000 பணம், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், மதனகோபாலிடம் விசாரித்தபோது அவருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு மதனகோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிலரை ஏமாற்றியது தெரியவந்ததால், மதனகோபாலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு