Published:Updated:

சென்னை: சிறுமியிடம் பழகி கர்ப்பமாக்கிய இளைஞர் - போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

சிறார் வதை

சென்னையில் குடியிருக்கும் சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

சென்னை: சிறுமியிடம் பழகி கர்ப்பமாக்கிய இளைஞர் - போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

சென்னையில் குடியிருக்கும் சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

Published:Updated:
சிறார் வதை

சென்னை மாதவரம் காவல் மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்துவருகிறார். அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனது. உடனே அவரை பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் சிறுமியின் பெற்றோரிடம் கூறினர். அதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பின்னர் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, புழல் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (20) என்பவர் குறித்த விவரத்தைத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். அதன் பிறகு சிறுமி அளித்த தகவலின்படி பார்த்திபனிடம் விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணையில், சிறுமியிடம் பழகிய பார்த்திபன் அவளைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். அதனால் சிறுமி மூன்று மாதம் கர்ப்பம் அடைந்திருக்கிறார். ஆனால், இந்தத் தகவலை சிறுமி பெற்றோருக்குத் தெரியாமல் மறைத்துவிட்டார். இந்த நிலையில், சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரின் கர்ப்பம் குறித்த தகவல் பெற்றோருக்குத் தெரியவந்தது.

கைது
கைது

இதையடுத்து மாதவரம் அனைத்து மகளிர் போலீஸார், பார்த்திபன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதுசெய்யப்பட்ட பார்த்திபன்மீது ஒரு கொலை வழக்கு, நான்கு கொலை முயற்சி வழக்குகள், ஆறு வழிப்பறி வழக்குகள் உட்பட மொத்தம் 14 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றன. சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை, கவுன்சலிங் அளிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism