Published:Updated:

சென்னையில் மாயமான மாணவி தி.மலையில் மீட்பு; பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

பாலியல் தொல்லை

மொட்டைமாடியில் துணி காயப்போடச் சென்ற மாணவி திடீரென மாயமானார். அது தொடர்பாக விசாரித்து மாணவியை மீட்ட போலீஸார், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரைக் கைதுசெய்தனர்.

சென்னையில் மாயமான மாணவி தி.மலையில் மீட்பு; பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

மொட்டைமாடியில் துணி காயப்போடச் சென்ற மாணவி திடீரென மாயமானார். அது தொடர்பாக விசாரித்து மாணவியை மீட்ட போலீஸார், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரைக் கைதுசெய்தனர்.

Published:Updated:
பாலியல் தொல்லை

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமி வசித்துவருகிறார். இவர், பிளஸ் டூ படித்துவருகிறார். கடந்த 19.1.2021-ம் தேதி வீட்டின் மொட்டைமாடியில் துணி காயப்போடுவதற்காக மாணவி சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் மொட்டைமாடிக்குச் சென்று பார்த்தனர். அங்கு மாணவி இல்லை. அதனால் மகளைப் பல இடங்களில் தேடினர். ஆனால் மாணவி குறித்த தகவல் தெரியவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர், திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை என்று புகாரளித்தனர். அதன்பேரில் திரு.வி.க.நகர் போலீஸார் சிறுமி மாயம் என வழக்கு பதிவுசெய்து தேடிவந்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்திரிப்புப் படம்

போலீஸாரின் விசாரணையில் மாணவி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் மாணவியை மீட்டனர். அப்போது மாணவியை திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவைச் சேர்ந்த சஞ்சய் (21) என்ற இளைஞர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவியையும் சஞ்சய்யையும் போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இருவரிடமும் தனித்தனியாக விசாரித்தபோது மாணவியை சஞ்சய், காதலித்தது தெரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பவத்தன்று மாணவியைட் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறிய சஞ்சய், தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கு மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு திரு.வி.க.நகர் காவல் நிலையத்திலிருந்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

போக்சோ சட்டம்
போக்சோ சட்டம்

செம்பியம் அனைத்து மகளிர் போலீஸார் சஞ்சய், மாணவியிடம் விசாரித்தனர். மாணவி அளித்த தகவலின்பேரில் சஞ்சய்யை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை, கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism