சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் குடியிருக்கும் ராபின் என்கிற ஜான் மோசஸ் (25) என்பவர் அறிமுகமாயிருக்கிறார். பின்னர் ராபின், சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24.12.2022-ம் தேதி சிறுமியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறிய ராபின், அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் தகவல் சிறுமியின் அம்மாவுக்கு தெரிந்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் அம்மா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராபினிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு ராபினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் ராபின், செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். சிறுமிக்கு கவுன்சலிங், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன. அதைத் தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.