Published:Updated:

சென்னை: பிளாட்பாரத்தில் தூங்கிய 5 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை! - நள்ளிரவில் சிக்கிய இளைஞர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை
சிறுமிக்குப் பாலியல் தொல்லை

சென்னை அடையார் பகுதியில் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை அடையார் காவல் மாவட்டப் பகுதியிலுள்ள பிளாட்பாரத்தில் ஒரு குடும்பம் வசித்துவருகிறது. 12.9.2021-ம் தேதி குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது 5 வயது சிறுமி திடீரெனச் சத்தம் போட்டார். அதைக் கேட்டு குடும்பத்தினர் கண்விழித்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, அந்த நபரை மடக்கிப்பிடித்தார். பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இரவு ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிடிப்பட்ட இளைஞரிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இளைஞரை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.

அடையார் அனைத்து மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில் அவரின் பெயர் கார்த்திக் (25) என்றும், மத்திய கைலாஷ் பகுதியிலுள்ள பிளாட்பாரத்தில் அவர் வசித்துவருவதும் தெரியவந்தது. கார்த்திக் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கார்த்திக்கிடம் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது.

கைது
கைது
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை!

இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடிப்பதிலும் கார்த்திக் ஈடுபட்டுவந்திருக்கிறார். மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு வீட்டில் ஐந்து கிராம் தங்க நகையையும், சாஸ்திரி நகர் பகுதியில் இரண்டு செல்போன்களையும் கார்த்திக் திருடியிருக்கிறார். அதனால் அவரிடமிருந்து தங்க நகைகள், செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு