Published:Updated:

இம்சையான இன்ஸ்டாகிராம் நட்பு - சென்னை கல்லூரி மாணவனிடம் கேரளச் சிறுமிகள் சிக்கியது எப்படி?

சைபர் க்ரைம் ( மாதிரி படம் )

சென்னை கல்லூரி மாணவனுடன் இன்ஸ்ட்ராகிராம் மூலம் கேரளச் சிறுமிகள் பழகிவந்தனர். திடீரென, சிறுமிகளை மிரட்டிய குற்றச்சாட்டுக்காக அந்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இம்சையான இன்ஸ்டாகிராம் நட்பு - சென்னை கல்லூரி மாணவனிடம் கேரளச் சிறுமிகள் சிக்கியது எப்படி?

சென்னை கல்லூரி மாணவனுடன் இன்ஸ்ட்ராகிராம் மூலம் கேரளச் சிறுமிகள் பழகிவந்தனர். திடீரென, சிறுமிகளை மிரட்டிய குற்றச்சாட்டுக்காக அந்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
சைபர் க்ரைம் ( மாதிரி படம் )

சென்னை, பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் மார்க் டி குரூஸ் (19). இவர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இவர்மீது கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தரப்பில் சென்னை புனித தோமையர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் குற்றம் சுமத்தப்பட்ட கல்லூரி மாணவன் மார்க் டி குரூஸிடம் விசாரணை நடத்தி அவரைக் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

கல்லூரி மாணவன் மார்க் டி குரூஸ்
கல்லூரி மாணவன் மார்க் டி குரூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சில மாதங்களுக்கு முன்பு மார்க் டி குரூஸ் கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகிவந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாகப் பழகிவந்தனர். அந்தச் சிறுமியின் தோழியும் மார்க் டி குரூஸிடம் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகிவந்திருக்கிறார். இரண்டு சிறுமிகளின் போன் நம்பர்களை வாங்கிய மார்க் டி குரூஸ் அவர்களுடன் நீண்ட நேரம் பேசிவந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து இரண்டு சிறுமிகளையும் மார்க் டி குரூஸ் காதலிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் இந்தக் காதல் விளையாட்டில் மார்க் டி குரூஸ் இரட்டை வேடம் போட்டிருக்கிறார். ஒருவரைக் காதலிப்பது இன்னொருவருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார். அதனால் சிறுமிகள், தாங்கள் ஏமாற்றப்பட்ட தகவல் தெரியாமல் வழக்கம்போல வாட்ஸ்அப்பில் மணிக்கணக்கில் பேசிவந்துள்ளனர். அப்போது தனித்தனியாக சிறுமிகளின் ஆபாச போட்டோக்களை ஆசைவார்த்தைகளைக் கூறி மார்க் டி குரூஸ் பெற்றிருக்கிறார். பின்னர், அதை வைத்துக்கொண்டு சிறுமிகளை மார்க் டி குரூஸ் மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.

கைது
கைது

டார்ச்சர் தாங்க முடியாத சிறுமிகள், தங்களின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போதுதான் இரண்டு சிறுமிகளையும் மார்க் டி குரூஸ் காதலித்த விவரம் தெரியவந்துள்ளது. சிறுமிகள் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர்கள், கேரள மாநிலம் சைபர் க்ரைம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கேரள மாநில போலீஸார், தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், புனித தோமையர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மார்க் டி குரூஸ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினோம். விசாரணையில் கேரளச் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மார்க் டி குரூஸின் செல்போனில் இருந்தன. இந்த இரண்டு சிறுமிகளைத் தவிர இன்னும் ஒரு சிறுமியின் போட்டோவும் இருந்தது. அது தொடர்பாக மார்க் டி குரூஸிடம் விசாரணை நடத்திவருகிறோம். கல்லூரி மாணவனான மார்க் டி குரூஸ், சமூக வலைதளங்கள் மூலம் சிறுமிகளிடம் அறிமுகமாகி, அவர்களை மிரட்டிவந்தது தெரியவந்துள்ளது. எனவே சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகிறவர்களிடம் சிறுமிகளும் பெண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism