Published:Updated:

சென்னை: 7 ஆண்டுகள் காதல்... திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய காதலன் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

திருமணம் செய்துகொள்வதாக நெருங்கிப் பழகிவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக காதலன்மீது இளம்பெண் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் காதலன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை மாதவரம் காவல் மாவட்டத்தில் குடியிருப்பவர் வனஜா (பெயர் மாற்றம்). 28 வயதாகும் இவருக்கும், கொருக்குப்பேட்டையில் குடியிருக்கும் தீபன் சக்ரவர்த்திக்கும் (31) பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக வனஜாவை தீபன் சக்ரவர்த்தி காதலித்துவந்திருக்கிறார். வனஜாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய தீபன் சக்ரவர்த்தி, அவரிடம் நெருங்கிப் பழகியிருக்கிறார்.

திருமணம்
திருமணம்
நீலகிரி: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை! -  போக்சோ வழக்கில் 70 வயது முதியவர் கைது

ஆனால் வனஜாவைத் திருமணம் செய்யாமல் தீபன் சக்ரவர்த்தி ஏமாற்றிவந்திருக்கிறார். இதையடுத்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி தீபன் சக்ரவர்த்தியிடம் வனஜா கூறியபோது அவர் மறுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இது குறித்து வனஜா, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீபன் சக்ரவர்த்தியிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லைகள்:

சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி, விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் வீட்டின் கீழ்தளத்தில் குடியிருந்து வரும் பாபு (56) என்பவர் சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமி, தாயிடம் கூறியதும் அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் அம்மா புகாரளித்தார். அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த பாபு என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். இவர், சிறுமியின் வீட்டின் கீழ்த்தளத்தில் வாடகைக்குக் குடியிருந்துவருகிறார். இவர்மீது போக்சோ சட்டத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

மற்றொரு சம்பவம்:

சென்னை பரங்கிமலை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியைக் காதலிப்பதாக விஜய் என்பவர் கூறியிருக்கிறார். பின்னர் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் அம்மா, புனித தோமையார்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜய்யை போலீஸார் கைதுசெய்தனர். அவர்மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில் சிறுமியின் அம்மா வேலைக்காக வெளியூர் செல்லும்போது தன்னுடைய 14 வயது மகளை விஜய்யிடம் வீட்டில் பார்த்துக்கொள்ளுமாறு விட்டுச் செல்வது வழக்கம். அப்போதுதான் சிறுமிக்கும் விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு