Published:Updated:

செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை; தலைமறைவாக இருந்த `ஓட்டை' பாலா போலீஸில் சிக்கியது எப்படி?!

திருட்டு வழக்கில் கைதான `ஓட்டை’ பாலா

தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட `ஓட்டை’ பாலாவை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை; தலைமறைவாக இருந்த `ஓட்டை' பாலா போலீஸில் சிக்கியது எப்படி?!

தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட `ஓட்டை’ பாலாவை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Published:Updated:
திருட்டு வழக்கில் கைதான `ஓட்டை’ பாலா

சென்னை பாடி, பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த 20.8.2022-ம் தேதி மாலை அண்ணாநகர் மேற்கு டி.வி.எஸ்.காலனி, 53-வது தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபர், ராஜலட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து ராஜலட்சுமி, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அதில் புளியந்தோப்பு, கன்னிகாபுரம் ஏ பிளாக் கஸ்தூரிபாய் காலனியைச் சேர்ந்த பாலமுருகன் என்கிற ஓட்டை பாலா (24) என்பவர்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

செயின் பறிப்பு
செயின் பறிப்பு

அதனால் பாலமுருகனை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில் கடந்த 13.12.2022-ம் தேதி நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சரவணன் என்பவரது வீட்டில் 6 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சரவணன் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரிலும் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்தத் திருட்டுச் சம்பவத்திலும் பாலமுருகன் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் போலீஸார் பாலமுருகனை பல இடங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் பாலமுருகன், தலைமறைவாக இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்து அவரைக் கைதுசெய்தனர். பின்னர் அவரிடமிருந்து 11 சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான பாலமுருகன் மீது கஞ்சா வழக்கு, ஐந்து திருட்டு வழக்குகள் உள்ளன. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாலமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.