Published:Updated:

சென்னை: சமூக வலைதளத்தால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - போக்சோவில் கைதான இளைஞர்

கைது

சமூகவலைதளம் மூலம் சிறுமிக்கு அறிமுகமான இளைஞர், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். சிறுமி அளித்த தகவலின்படி இளைஞர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை: சமூக வலைதளத்தால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - போக்சோவில் கைதான இளைஞர்

சமூகவலைதளம் மூலம் சிறுமிக்கு அறிமுகமான இளைஞர், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். சிறுமி அளித்த தகவலின்படி இளைஞர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
கைது

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமி குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். சிறுமி சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்திருக்கிறார். அப்போது சமூக வலைதளங்கள் மூலம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23) என்ற இளைஞர் சிறுமிக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் நட்பாகப் பழகிவந்துள்ளனர். இந்தச் சூழலில் `உன்னுடைய ஆபாசப் படங்கள், வீடியோக்கள் என்னுடைய செல்போனில் இருக்கின்றன' என்று ஆகாஷ் கூறியுள்ளார். அதைக் கேட்டு சிறுமி அதிர்ச்சியடைந்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

`படம், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்' என்று சிறுமியை ஆகாஷ் மிரட்டியுள்ளார். இதையடுத்து ஆகாஷ், அழைத்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் சிறுமி சென்றுள்ளார். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற ஆகாஷ், அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆகாஷின் டார்ச்சரைத் தாங்க முடியாத சிறுமி, நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி தரப்பில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து ஆகாஷிடம் விசாரித்தனர். சிறுமி அளித்த தகவலின்படி ஆகாஷைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆகாஷ்
ஆகாஷ்

இது குறித்து போலீஸார், ``சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகிறவர்களிடம் சிறுமிகள், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆபாச படங்கள், வீடியோக்கள் இருப்பதாக மிரட்டினால் சிறுமிகள் தயங்காமல் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். புகாரளித்த சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை, கவுன்சலிங் அளித்துள்ளோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism