Published:Updated:

சென்னை: திருட்டுப் புகார்; சம்பளம் பிடித்தம் - உதவி மேலாளரைத் தாக்கிய முன்னாள் ஊழியர்கள்

மேலாளரைத் தாக்கும் சிசிடிவி

திருட்டுப் புகாரையடுத்து இரண்டு ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு, அவர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊழியர்கள் மேலாளரைச் சரமாரியாகத் தாக்கினர்.

சென்னை: திருட்டுப் புகார்; சம்பளம் பிடித்தம் - உதவி மேலாளரைத் தாக்கிய முன்னாள் ஊழியர்கள்

திருட்டுப் புகாரையடுத்து இரண்டு ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு, அவர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊழியர்கள் மேலாளரைச் சரமாரியாகத் தாக்கினர்.

Published:Updated:
மேலாளரைத் தாக்கும் சிசிடிவி

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றிவருகிறார். அதே நிறுவனத்தில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஷ், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏஜஸ் ஆகியோர் வேலை பார்த்துவந்தனர். இந்த நிறுவனத்தில் எண்ணெய் பாக்கெட்டுகள் திருட்டுப் போயின. அது தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பார்த்த நிறுவன அதிகாரிகள், ஹரிஷ், ஏஜஸ் ஆகியோர்தான் அவற்றைத் திருடியதாகக் குற்றம்சாட்டி இருவரையும் பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களின் சம்பளத்தையும் நிறுவனம் பிடித்தம் செய்தது.

புகழேந்தி
புகழேந்தி

இதற்கெல்லாம் நிறுவனத்தின் உதவி மேலாளர் புகழேந்திதான் காரணம் என்று ஹரிஷ், ஏஜஸ் இருவரும் கருதினர். அதனால் புகழேந்தியிடம் போனில் இருவரும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு புகழேந்தி, ``என்னால் ஒன்றும் செய்ய முடியாது, நீங்கள் மேலதிகாரிகளிடம் பேசுங்கள்’’ என்று கூறிவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த ஏஜஸ், ஹரிஷ் ஆகியோர் புகழேந்தியை நேரில் சந்திக்கத் திட்டமிட்டனர். அதன்படி நேற்றிரவு அம்பத்தூருக்கு இருவரும் சென்றனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த புகழேந்தியிடம் அவர்கள் இருவரும் சம்பளத்தைக் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் புகழேந்தியை இருவரும் சரமாரியாகத் தாக்கினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைப் பார்த்த சக ஊழியர்கள் சண்டையை விலக்கிவிட்டனர். ஆனாலும் புகழேந்தியை ஏஜஸ், ஹரிஷ் ஆகியோர் தாக்கியதில் அவரின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து புகழேந்தியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சக ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்தனர். கையில் கட்டுடன் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்த புகழேந்தி, ஹரிஸ், ஏஜஸ் மீது புகாரளித்ததோடு சிசிடிவி கேமரா பதிவுகளையும் கொடுத்தார். அதனடிப்படையில் உதவி கமிஷனர் கனகராஜ் மேற்பார்வையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

தலைமறைவாக இருந்த ஹரிஷ், ஏஜஸை போலீஸார் சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு நேற்றிரவே போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் மேலாளர் தாக்கப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism