Published:Updated:

சென்னை: `அவள் எனக்குத்தான்; நீ மறந்துவிடு' - ஒரே பெண்ணைக் காதலித்த தகராறில் சிறைக்குச் சென்ற இளைஞர்

காதல்
காதல்

பள்ளியில் படிக்கும்போது ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலித்திருக்கின்றனர். அதனால் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள், இளைஞர்களான பிறகும் அந்தப் பெண்ணுக்காகக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை முத்தாபுதுப்பேட்டை, தெலுங்கு காலனி பகுதியில் வசித்துவருபவர் பிரகாஷ் (18). இவரை 15-ம் தேதி வழிமறித்த ஒரு கும்பல் கத்தியைக் காட்டி, கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. அது தொடர்பாக பிரகாஷின் அம்மா சுமதி, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தது யாரென்று விசாரித்தனர். விசாரணையில் திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்த பிரவீன் ராஜும், அவரின் நண்பர்களும் எனத் தெரிந்தது.

காதல்
காதல்

இதையடுத்து பிரவீன்ராஜைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``பிரகாஷும் பிரவீன்ராஜும் ஒரே பள்ளியில் படித்திருக்கின்றனர். அப்போது ஒரே பெண்ணை இருவரும் காதலித்திருக்கின்றனர். அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

வகுப்பறையிலேயே இருவரும் மோதிக்கொண்ட தகவல் பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிந்ததும் இருவரும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத இருவரும் கிடைத்த வேலைகளைச் செய்துவருகின்றனர். தற்போது இருவருக்கும் 18 வயது கடந்துவிட்டது. காதல் தகராறில் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத பிரகாஷ், பெயின்ட்டராகப் பணியாற்றிவருகிறார். பிரவீன்ராஜ், அரசு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார். இந்தநிலையில்தான் காதல் முன்விரோதம் காரணமாக பிரகாஷை, பிரவீன்ராஜ் நண்பர்களுடன் சேர்ந்து கொலைசெய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.

திருச்சி: சாக்லேட் காதல்...  போக்சோ வழக்கு! - போலீஸாரைக் குழப்பிய சிறுமியின் வாக்குமூலம்
கத்தி
கத்தி

அதன்பேரில் பிரவீன்ராஜ், அவரின் நண்பர்கள் மணிகண்டன் (19), பிரேம்குமார் என்கிற கோலி (23), ரோஸ் என்கிற மோகன்ராஜ் (21), சாலமன்ராஜா என்கிற இலக்கியா (20) ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து இரண்டு பைக்குகள், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்’’ என்றனர்.

பிரகாஷை, பிரவீன் ராஜ் கத்திமுனையில் மிரட்டும்போது, `அவள் எனக்குத்தான். நீ அவளை மறந்துவிடு’ என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஒரே பெண்ணைக் காதலித்ததில் ஏற்பட்ட தகராறு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யும் வரை சென்றிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு