Published:Updated:

`சிறுவர்கள் மூலம் வேவு!' - ஊரடங்கில் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 பேர்

பறிமுதல் செய்த கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்
பறிமுதல் செய்த கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்

கொரோனா ஊரடங்கால் சென்னையில் குடியிருக்கும் பலர், வீட்டைப் பூட்டி விட்டு தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

சென்னை பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகர், குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ``நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் ஜெயங்கொண்டம். நான் கோடம்பாக்கத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளேன். 22.3.2020-ம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கால் எனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றேன்.

பூஜை பொருள்கள்
பூஜை பொருள்கள்
`ஊரடங்கில் நாயிடம் சிக்கிய சிறுவன்; தலையில் தையல்' - வழக்கில் சிக்கிய ஆவடி கட்டட கான்ட்ராக்டர்

18.5.2020-ம் தேதி எனது வீட்டிற்கு வந்தபோது பூட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றபோது பூஜை அறையிலிருந்த இரண்டு ஜோடி வெள்ளி விளக்குகள், லேப்டாப் ஆகியவை திருடப்பட்டிருந்தன. எனவே, பூட்டை உடைத்து திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வழக்குபதிந்து விசாரித்தார்.

இதையடுத்து ராதாநகர், குரோம்பேட்டை, நேதாஜிநகர், பெருங்களத்தூர், கண்ணப்பன்நகர், ஓம்சக்திநகர், நெமிலிச்சேரி, திருவள்ளுவன்நகர், ருக்மணிநகர், பெரும்பாக்கம், மேடவாக்கம், ராகவேந்திராநகர், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு லேப்டாப், கேமரா, வெள்ளி பொருள்கள், தங்க நகைகள், பைக் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாகக் காவல் நிலையத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சிறுவர்கள், பைக்கில் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தகவல் கொடுப்பார்கள். சிக்னல் கிடைத்ததும் சரவணன், சங்கர், நாகு ஆகியோர் கொள்ளையடித்து வந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் 12 வீடுகளில் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.
போலீஸ்
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்
துடிப்பை நிறுத்திய மருத்துவக் கல்லூரி மாணவியின் இதயம்! - viscera ரிப்போர்ட்டால் விலகிய மர்மம்

கொள்ளை நடந்த வீடுகளின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பூட்டிய வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு முன் 3 பேர் வந்து செல்வதும் அதன்பிறகு 3 பேர் கொள்ளையடித்துவிட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், லேப்டாப்கள், செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஊரடங்கையொட்டி பூட்டிய வீடுகளில் 6 பேர் கொள்ளையடித்து வந்துள்ளனர். விசாரணையில் பல்லாவரத்தைச் சேர்ந்த சரவணன் (27), வண்டலூரைச் சேர்ந்த சங்கர் (26), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த நாகு ஆகியோர் கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்களுக்கு பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், பல்லாவரத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் வேவு பார்த்து தகவலைச் கூறிவந்துள்ளனர்.

பூஜை பொருள்கள்
பூஜை பொருள்கள்
`நுங்குக்கு ஆசைப்பட்ட குழந்தைகள்; பனை மரத்தில் ஏறிய தந்தை!’- திருநின்றவூரில் நடந்த சோகம்

இந்தச் சிறுவர்கள், பைக்கில் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தகவல் கொடுப்பார்கள். சிக்னல் கிடைத்ததும் சரவணன், சங்கர், நாகு ஆகியோர் கொள்ளையடித்து வந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் 12 வீடுகளில் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கொள்ளையடித்த பொருள்களை விற்று சந்தோஷமாக இவர்கள் இருந்துள்ளனர். அதில் கிடைத்த பணத்தை ஆளுக்கேற்ப பங்கீட்டுள்ளனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு