Published:Updated:

சென்னை: `சர்ச்சுக்குப் போகலாம்; கதவைத் திற!’- மனைவியைக் கொலைசெய்த கணவர்

கொலை
கொலை ( representational image )

மனைவி வேலைக்குச் செல்வது பிடிக்காத கணவர், அவரைக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

சென்னை, மாதவரம் பால்பண்ணையை அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் லாரன்ஸ். இவரின் மனைவி சரோ வெனிஷியா (41). இவர்களுக்கு காயத்திரி லீனா, காவியா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கடந்த 13-ம் தேதி இரவு சரோவெனிஷா வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

நெல்லை: பல்வேறு வழக்குகள்; திருந்தி வாழ்ந்துவந்த இளைஞர் அடித்துக் கொலை! - போலீஸ் விசாரணை
 கொலை
கொலை

அவரைச் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோ வெனிஷியா உயிரிழந்தார். இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் சரோ வெனிஷியாவை அவரருடைய கணவர் எட்வர்ட் லாரன்ஸ் கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து காயத்திரி லீனா, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாமாண்டு படித்துவருகிறேன். என் தங்கை காவியா, ப்ளஸ் டூ படித்துவிட்டு கல்லூரி படிக்க வசதியில்லாத காரணத்தால் எம்.கே.பி நகரிலுள்ள பைக் ஷோ ரூமில் வேலை பார்த்துவருகிறார்.

என் அப்பா எட்வர்ட் லாரன்ஸ் கார்பென்ட்டராக வேலை பார்த்துவருகிறார். அவரின் சொந்த ஊர் செங்கல்பட்டு தச்சூர். என் அம்மாவின் சொந்த ஊர் சென்னை சூளைமேடு. அப்பாவும் அம்மாவும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

கொலை
கொலை
Representational image

நாங்கள் பெரிய பிள்ளைகளாகிப் படிக்க அப்பாவின் வருமானம் போதவில்லை என்பதால், அம்மா அழகுநிலையத்துக்கு வேலைக்குச் சென்றார். எனது தாயார் வேலைக்குச் செல்வது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அது தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடந்துவந்தது. எங்களைப் பிரிந்து அப்பா, பாண்டிச்சேரிக்குச் சென்றுவிட்டார். அதனால், நாங்கள் எருக்கஞ்சேரியிலும் ஈச்சம்பாக்கத்திலும் குடியிருந்தோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் தாயார்மீது சந்தேகப்பட்டுக்கொண்டு அப்பா எங்களைப் பிரிந்து சென்றுவிட்டார். கொரோனா காலக்கட்டத்தில் வேலை இல்லாததால், நாங்கள் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டோம். பின்னர் பிழைப்பு தேடி சென்னை வந்தோம். சென்னையில் நாங்கள் தங்கியிருந்த விலாசத்தை உறவினர்கள் மூலம் தெரிந்துகொண்ட அப்பா, நானும் தங்கையும் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மாவிடம் வீண் தகராறு செய்துவந்தார். `வேலைக்குச் செல்கிறேன் என்று வெளியே சென்று ஊரைச் சுற்றுகிறாயா...’ என்று மிரட்டியதாக எங்களிடம் அம்மா கூறினார்.

கொலை
கொலை

மேலும், `உன்னை ஒழித்துக்கட்டினால்தான் பெண் பிள்ளைகள் நன்றாக இருக்கும்’ என்றும் அம்மாவை அப்பா மிரட்டிவந்தார். சில நேரங்களில் எங்கள் முன்னிலையில் அம்மாவை அப்பா தகாத வார்த்தைகளால் திட்டுவார். அப்போது, `என்னிக்கு இருந்தாலும் கத்தியால் குத்திச் சாகடிப்பேன்’ என்று மிரட்டுவார்.

13-ம் தேதி மாலை நானும் தங்கையும் ஜவுளிக்கடைக்குச் சென்றோம். அப்போது அம்மாவையும் அழைத்தோம். அதற்கு அம்மா, உடல்நலம் சரியில்லை என்று கூறிவிட்டார். துணிகளை எடுத்துவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். இரவு 10 மணியளவில் அம்மா போன் செய்தார். `வீட்டுக் வெளியில் அப்பா நின்றுகொண்டு கதவைத் திறக்கும்படி கெஞ்சுகிறார்’ என்று கூறினார். அதற்கு நானும் தங்கையும் கதவைத் திறக்க வேண்டாம் என்று கூறினோம். அதன் பிறகு அம்மா மீண்டும் போன் செய்து, `சர்ச்சுக்குச் செல்லாம். கதவைத் திற’ என்று கூறுவதாகத் தெரிவித்தார். அதற்கு `கதவைத் திறக்க வேண்டாம்’ என்று நாங்கள் அம்மாவிடம் கூறினோம். அதன் பிறகு நாங்கள் வீட்டுக்கு வந்தபோது அம்மா ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போரடிக்கொண்டிருந்தார். அம்மாவிடம் விசாரித்தபோது அப்பாதான் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்தார். எனவே அப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். தலைமறைவாக இருக்கும் எட்வர்ட் லாரன்ஸை போலீஸார் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு