Published:Updated:

குளியலறை... சமையல் மாஸ்டர்' - சென்னைப் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தவர்களைப் பதறவைத்த வீடியோ

சென்னை காரம்பாக்கம் பகுதியில் செயல்படும் பெண்கள் விடுதியில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமையல் மாஸ்டர் வெங்கடபிரசாத்
சமையல் மாஸ்டர் வெங்கடபிரசாத்

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் பெண்கள் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் உள்ள குளியலறை அருகே அங்கு வேலைபார்க்கும் ஒருவர் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தார். அதை அங்குள்ள பெண்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்தப் பெண்கள், அந்த நபரைக் கவனித்தனர்.

செல்போன்
செல்போன்

அப்போது அவரின் கையில் செல்போன் இருந்தது. அதன்மூலம் குளியலறை உள்ளே குளிக்கும் பெண்களை அந்த நபர் வீடியோ எடுத்திருப்பது தெரிந்தது. இதனால், அந்த நபர் குறித்த தகவலை விடுதி நிர்வாகத்திடம் பெண்கள் தெரிவித்தனர்.

`சேர மறுத்துவிட்டான்; கொன்றுவிட்டேன்'- கல்லூரி மாணவர் கொலை வழக்கில் போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்!

இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரித்தபோது அவர் விடுதியில் வேலைபார்க்கும் சமையல் மாஸ்டர் வெங்கடபிரசாத் (22) என்று தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தார். இதனால் மாஸ்டர் வெங்கடபிரசாத் மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

REPRESENTATIONAL IMAGE
REPRESENTATIONAL IMAGE

இன்ஸ்பெக்டர் வீரகுமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் சமையல் மாஸ்டர் வெங்கட பிரசாத், விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தது உண்மை எனத் தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வெங்கடபிரசாத், இந்த விடுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.