Published:Updated:

`தடம் மாறிய அம்மாவின் வாழ்க்கை; தட்டிக்கேட்ட மகள் கொலை!'- 6 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது

கொலை வழக்கில் கைதான சேவியர் அருள்
கொலை வழக்கில் கைதான சேவியர் அருள்

அம்மாவின் வாழ்க்கை தடம்மாறியதால், அதை அவரின் மகள் தட்டிக்கேட்டுள்ளார். உடனே மகளைக் கொலை செய்து வீட்டுக்குள் புதைத்துள்ளனர்.

சென்னை மேடவாக்கம், ராமையா நகர், நேரு தெருவைச் சேர்ந்த சேவியர் அருள் (45). சித்தாலப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவந்த இன்ஜினீயர் ஹென்றி ஜெயசிங் (33) என்பவரை ஒரு சவரன் தங்கச் செயினுக்காக சேவியர் அருள் கொலை செய்ததாக பள்ளிக்கரணை போலீஸார் மார்ச் மாதத்தில் கைதுசெய்தனர். இந்த வழக்கில், சேவியர் அருளின் நண்பர் அமுல்ராஜும் கைதுசெய்யப்பட்டார். ஹென்றி ஜெயசிங் கொலை வழக்கு தொடர்பாக சேவியர் அருளிடம் போலீஸார் விசாரித்தபோது, இன்னொரு இளம் பெண் கொலை குறித்த தகவலும் வெளியானது.

கொலை செய்யப்பட்ட சபானா
கொலை செய்யப்பட்ட சபானா
முதல் கொலையைக் கண்டுபிடிக்கல; அந்தத் தைரியத்தில் அடுத்த கொலை! -  சென்னை மநீம நிர்வாகியின் பின்னணி

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த சபானா (23) வைக் கொலை செய்து பெரும்பாக்கம் ஏரியில் வீசியதை சேவியர் அருள் கூறினார். சபானாவும் சேவியர் அருளின் மகன் மைக்கேல் விஜய்யும் காதலித்துள்ளனர். இந்தக் காதலுக்கு சேவியர் அருள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மைக்கேல் விஜய்யும் சபானாவும் நெருங்கிப் பழகினர். இதில் சபானா, கர்ப்பமாகியுள்ளார்.

கர்ப்பத்தைக் கலைக்க சபானாவிடம் சேவியர் அருளும் மைக்கேல் விஜய்யும் கூறியுள்ளனர். ஆனால் சபானா கேட்கவில்லை. தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். அதனால் 20.11.2019-ல் பெரும்பாக்கம் ஏரிக்கரையில் சபானாவை கொலை செய்து, ஏரிக்குள் வீசியுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் சேவியர் அருள், மைக்கேல் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 கொலை வழக்குகளில் சேவியர் அருள் அவரின் மகன் மைக்கேல் விஜய் மற்றும் அமுல்ராஜ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மைக்கேல் விஜய்
மைக்கேல் விஜய்

சேவியர் அருள், மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகியாக இருந்தவர். அவர் கைதுசெய்யப்பட்ட செய்தி வெளியானதும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபுல்கான் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்தார். அப்போது அவர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் என்னுடைய மகள் எஸ்தர்அலி பாத்திமாவைக் காணவில்லை. என் மனைவி சகாயராணியின் தம்பி சேவியர் அருள்தான் என் மகளையும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறினார். ஏற்கெனவே திருப்பூர் போலீஸாரிடம் எஸ்தர்அலி பாத்திமா, மாயமானது தொடர்பாக புகார் கொடுத்துள்ளேன். ஆனால், திருப்பூர் போலீஸாரால் என் மகளைக் கண்டுபிடித்துத் தர முடியவில்லை என வழக்கை முடித்துக்கொண்டனர் என்ற தகவலையும் தெரிவித்தார்.

இதையடுத்து, சேவியர் அருளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்படி பள்ளிக்கரணை போலீஸாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், துணை கமிஷனர் பிரபாகர், உதவி கமிஷனர் சபரிநாதன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேவியர் அருளை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார். அப்போது, எஸ்தர் அலி பாத்திமா குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவரைக் கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த தகவலை சேவியர் அருள் கூறினார்.

திருப்பூரில் சேவியர் அருள் மற்றும் போலீஸார்
திருப்பூரில் சேவியர் அருள் மற்றும் போலீஸார்
``கூட்டம் இல்லை, ஆடம்பரம் இல்லை..!" - மாஸ்க் அணிந்து திருமணத்தை நடத்திய விஜயகாந்த், பிரேமலதா #Corona

இந்தத் தகவல் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. சென்னையிலிருந்து சேவியர் அருளை அழைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் அழகு, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, இளங்கனி, சுகுமார், கண்ணன் மற்றும் போலீஸார் திருப்பூர், பழவஞ்சி சாலை, வேலன் நகருக்குச் சென்றனர். அந்த வீட்டை விற்றுவிட்டு சேவியர் அருளின் சகோதரி சகாயராணி குடும்பத்தினர் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். தற்போது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தகவலை தெரிவித்த போலீஸார், சேவியர் அருள் காட்டிய இடத்தில் தோண்டினர்.

அப்போது, மனித எலும்புகூடு ஒன்று இருந்தது. இதையடுத்து, சம்பவம் நடந்த இடம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், பள்ளிக்கரணை போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதோடு, சேவியர் அருளை சென்னைக்கு அழைத்துவந்த பள்ளிக்கரணை போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, வீரபாண்டி போலீஸார் மீண்டும் சேவியர் அருளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். பின்னர், எஸ்தர்அலி பாத்திமாவின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்ய வீரபாண்டி போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

திருப்பூரில் அடையாளம் காட்டும் சேவியர் அருள்
திருப்பூரில் அடையாளம் காட்டும் சேவியர் அருள்
``திருடனாக மாறிய முன்னாள் போலீஸ்காரர்; துணிந்து போராடிய பெண்"- மோசடி வழக்கால் வேலை பறிபோனது!

இதற்கிடையில், தன் சகோதரி சகாயராணி மற்றும் அவரின் வளர்ப்பு மகன் பாக்கியராஜுடன் சேர்ந்து, எஸ்தர்அலி பாத்திமாவைக் கொலை செய்த தகவலை சேவியர் அருள், போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சகாயராணியின் வாழ்க்கை தடம் மாறியதை எஸ்தர்அலி பாத்திமா தட்டிக் கேட்டதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்து, வீட்டுக்குள் புதைத்தோம். அதற்கு, 10,000 ரூபாயை சகோதரி சகாயராணியிடமிருந்து வாங்கியதாகவும் சேவியர் அருள் கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டு நடந்த கொலை, 6 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு