Published:Updated:

சென்னை: `எங்க அம்மா நீதிபதி' - சட்டக் கல்லூரி மாணவியை ஏமாற்றிய இளைஞர்!

கைதான இளைஞர் பாலாஜி
கைதான இளைஞர் பாலாஜி

சென்னையில் சட்டக் கல்லூரி மாணவியை ஏமாற்றி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் இளைஞர் பாலாஜியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ``2018-ம் ஆண்டு முதல் பெரம்பூரைச் சேர்ந்த பாலாஜியும் நானும் காதலித்துவந்தோம். என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பாலாஜி, என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால், நான் கர்ப்பமடைந்தேன். கட்டாயப்படுத்தி பாலாஜி மற்றும் அவரின் குடும்பத்தினர் கர்ப்பத்தைக் கலைத்தனர்.

காதல் - பாலியல் வன்கொடுமை
காதல் - பாலியல் வன்கொடுமை

மேலும் பாலாஜி, என்னைத் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டிவருகிறார். எனவே பாலாஜியின் மீதும், அவரின் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை: மாணவிமீது ஒருதலைக் காதல்! - உதவிப் பேராசிரியரைச் சிக்கவைத்த போலி திருமணச் சான்றிதழ்

புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலாஜியைத் தேடிவந்தனர். அவர் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் சட்டக் கல்லூரி மாணவியின் வீட்டுக்குச் சென்ற பாலாஜி, அங்கு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதனால், பாலாஜியைப் பிடித்த மாணவியின் குடும்பத்தினர், காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து பாலாஜியை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது
Representational Image

போலீஸ் விசாரணையில் பாலாஜி, தன்னுடைய அம்மாவை நீதிபதி என்று சட்டக் கல்லூரி மாணவியிடம் கூறியதாகத் தெரியவந்திருக்கிறது. சட்டக் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே போலீஸார் நடவடிக்கை எடுத்ததாக மாணவி தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு