Published:Updated:

சென்னை: பகலில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! - கட்சிப் பிரமுகரைத் தேடும் போலீஸ்

இளைஞரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
இளைஞரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை ( representational image )

சென்னையில் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் கஞ்சா போதையிலிருந்த இளைஞர் அன்பாகப் பேசியிருக்கிறார். பிறகு சிறுமியிடம் அவர் தவறாக நடந்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சென்னை, எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு 11 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு அவரின் அம்மா சென்றார். சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியிடமும் அவரின் அம்மாவிடமும் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது சிறுமியின் அம்மா `விளையாடச் சென்றாள். அதன் பிறகுதான் அவளுக்கு அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டது’ என்று கூறியிருக்கிறார். அடுத்து சிறுமியிடம் அங்கிருந்த மருத்துவர்கள் விசாரித்தபோது, வீட்டின் அருகில் குடியிருக்கும் இளைஞர் ஒருவர், தனக்குத் தின்பண்டம் வாங்கிக் கொடுத்துவிட்டு தவறாக நடந்துகொண்டதைக் கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார். இதையடுத்து, சிறுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி சிறுமியின் அம்மாவிடம் தெரிவித்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
Representational Image
சென்னை அதிர்ச்சி: `யாருக்கு தில் அதிகம்?' - 23-வது மாடிச் சுவரில் சாகசம் செய்த சிறுமி!

சிறுமிக்கு நேர்ந்த கொடுமையைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரைத் தேடினர். ஆனால் அவரின் வீடு பூட்டியிருந்தது. இதையடுத்து சிறுமியின் அம்மா, முத்தியால்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

சிறுமி கொடுத்த தகவலின்படி திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்த இளைஞர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சிறுமி வசிக்கும் பகுதியில் தங்கியிருந்து, கூலி வேலை செய்துவந்த அந்த இளைஞரின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அதனால், அவரைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு தனியாக இருந்திருக்கிறார் அந்த இளைஞர். கஞ்சா போதைக்கு அடிமையான அவர், நேற்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
representational image

அப்போது அந்தப் பகுதியில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த இளைஞர், தின்பண்டம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பின்னர் ஒரு சிறுமியை அழைத்துக்கொண்டு அங்கிருக்கும் ஒரு வீட்டுக்குள் சென்று போதையில் தவறாக நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் அந்த இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கேரளா: கொரோனா பாதித்த இளம் பெண்... ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை! - சிக்கிய ஓட்டுநர்

சம்பவம் நடந்த இடத்துக்கு நாம் சென்றபோது அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ``பாதிக்கப்பட்ட சிறுமி, மாநகராட்சிப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். நேற்று காலை தோழிகளுடன் அங்கு விளையாடியிருக்கிறார். அப்போதுதான் அந்த இளைஞர் சிறுமியை மிரட்டி, உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இளைஞரின் உறவினர்கள் வீட்டில் இல்லாததால், அங்கு சிறுமியிடம் அவர் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். `இதை வெளியில் கூறினால், கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டியும் இருக்கிறார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
representational image

அதற்கு பயந்து சிறுமி, நடந்தது எதையும் யாரிடமும் சொல்லவில்லை. வீட்டுக்கு வந்த சிறுமி சோர்வாக இருந்திருக்கிறார். அதைப் பார்த்த அவரின் அம்மா, என்னவென்று விசாரித்திருக்கிறார். பின்னர் சிறுமியின் ஆடையிலிருந்த ரத்தப்போக்கைப் பார்த்த அவரின் தாய், மகள் பூப்பெய்துவிட்டாள் என்று கருதியிருக்கிறார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் சந்தோஷமாக அந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சிறுமிக்கான சடங்கை செய்தபோதுதான் ரத்தப்போக்கு நிற்காததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் சிறுமிக்கு நடந்த கொடுமை தெரியவந்தது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்த இளைஞர், கட்சி ஒன்றில் உறுப்பினராக இருக்கிறார். அவரின் மனைவிதான் சிறுமியைக் காப்பாற்றியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. தற்போது குடும்பத்துடன் இளைஞர் தப்பிவிட்டார். அவரிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். குடியிருப்புப் பகுதிக்குள் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட இளைஞர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சிறுமி
சிறுமி
representational image

சென்னைச் சிறுமிக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த இளைஞரால் நடந்தக் கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்கின்றனர் அந்தப்பகுதி மக்கள். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்பா இல்லை. அம்மாவும் தாத்தாவும்தான் குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர். இருவரும் வெளியில் சென்ற நேரத்தில்தான் இந்தக் கொடுமை சிறுமிக்கு நடந்துள்ளது. சிறுமியின் தோழிகளிடமும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். அவர்கள், சிறுமியை இளைஞர் அழைத்துச் சென்ற தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இளைஞர் சிக்கினால் இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு