Published:Updated:

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயத்தூள் விற்பனை! - போலீஸ் விசாரணை

கைப்பற்றப்பட்டப் போலி பெருங்காயத்தூள்
கைப்பற்றப்பட்டப் போலி பெருங்காயத்தூள்

பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயத்தூள் விற்பனை நடைபெறுவதைக் கண்டறிந்த காவல்துறையினர், அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை அருகேயுள்ள தாம்பரத்தில் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் எல்.ஜி கூட்டுப் பெருங்காயம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயம் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

போலி பெருங்காயத்தூள்
போலி பெருங்காயத்தூள்

இந்த புகார் மனுவை விசாரித்த காவல்துறையினர், போலி பெருங்காயத்தூள் விற்பனை செய்யப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், ஜபார்கான்பேட்டை போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் தாம்பரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மற்றும் இமானுவேல் ஞானசேகரன் (45), ஜான் (33) ஆகியோரின் கடைகளிலிருந்து 115, 50 கிராம் போலி பெருங்காயத்தூள் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி பெருங்காயத்தூள்
போலி பெருங்காயத்தூள்

குரோம்பேட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் செந்தில்குமார் (36), ராஜேந்திரன் (53) ஆகியோருக்குச் சொந்தமான கடைகளிலிருந்து 160, 50 கிராம் போலி பெருங்காயத்தூள் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 14 கிலோ போலி பெருங்காயத்தூள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த பெருங்காயத்தூள் டப்பாக்களை அவர்களுக்கு விற்பனை செய்தது யார் என்பது குறித்து பறிமுதல் செய்யப்பட்ட நால்வரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு