Published:Updated:

சென்னை: `இனி உங்களுக்கு நல்ல காலம்தான்'- குறிசொன்ன சாமியார்; லட்சங்களைச் சுருட்டிய கும்பல்

மோகன்தாஸ்
மோகன்தாஸ்

சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை ஆரம்பித்த தம்பதியர், திருச்சியைச் சேர்ந்த சாமியாரிடம் குறி கேட்டிருக்கிறார்கள். பின்னர், அவர்கள் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்து, ஏராளமான இளைஞர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

சென்னை, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரின் மனைவி ராணி. இவர்கள் அந்தப் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நடத்திவந்திருக்கிறார்கள். இந்த அலுவலகத்தில் வேலைக்காக ஏராளமான இளைஞர்கள் பணம் செலுத்தினர். ஆனால், அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் புகாரளித்தனர்.

வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய ராணி
வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய ராணி

அதன்பேரில் விசாரிக்கும்படி மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழிக்கு, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதையடுத்து துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் மோகன்தாஸ் மற்றும் அவரின் மனைவி ராணியிடம் விசாரித்தனர். விசாரணையில் இந்தக் கும்பல் கப்பல் படையில் வேலைவாங்கித் தருவதாக இளைஞர்களிடம் பணம் வசூலித்தது தெரியவந்தது. இவர்கள் மட்டுமல்லாமல் திருச்சியைச் சேர்ந்த ஒரு கும்பலும் பணம் வசூலித்திருக்கிறது.

இ-பாஸ் முதல் கிசான் மோசடி வரை..! - தமிழக பா.ஜ.க-வின் லேட் ரியாக்‌ஷன்ஸ்

இதையடுத்து மோகன்தாஸ், ராணி, கார்த்திக் மோகன்ராஜ், பார்த்திபன் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்தக் கும்பல், சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை ஏமாற்றியது தெரியவந்திருக்கிறது. இந்த மோசடிக்குப் பின்னணியில் ஒரு பெண்ணும், திருச்சியைச் சேர்ந்த சாமியார் ஒருவரும் இருக்கும் ரகசியத் தகவல் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது.

கார்த்திக்
கார்த்திக்

இது குறித்து மத்திய குற்றப் பிரிவு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ராணியின் சகோதரருக்கு அறிமுகமான பெண் ஒருவர்தான், இந்த மோசடிக்கு மூளையாக இருந்திருக்கிறார். அந்தப் பெண்தான், `விசாகப்பட்டினத்தில் கப்பல் படையில் துப்பரவுப் பணி முதல் அதிகாரிகள் பணிகள் வரை காலியாக இருக்கின்றன. அந்தப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அதிகாரயை எனக்குத் தெரியும். அதனால், பணம் கொடுத்தால் அவர் மூலம் வேலையை வாங்கி விடலாம். அதற்கு நமக்கும் கமிஷன் கிடைக்கும்’ என்று மோகன்தாஸிடமும் ராணியிடமும் ஆசை வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்.

அதை நம்பயிருக்கிறார்கள் மோகன்தாஸு, ராணியும். இருவரும் அந்தப் பெண்ணுடன் திருச்சியைச் சேர்ந்த சாமியார் ஒருவரைச் சந்தித்து குறி கேட்டிருக்கிறார்கள். அப்போது சாமியார், `இனி உங்களுக்கு நல்ல காலம்தான் என்று ஜாதகத்தில் கட்டம் சொல்கிறது' என்று அருள்வாக்கு கூறியிருக்கிறார். பின்னர் இவர்களின் திட்டத்தை அறிந்த சாமியாரும் அவரின் உறவினர் ஒருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அரசு வேலைக்காகக் காத்திருந்த இளைஞர்களிடம் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பணம் பெற்றிருக்கிறது. கைதானவர்கள் அனைவரும் பட்டதாரிகள்.

பார்த்திபன்
பார்த்திபன்
கிசான் நிதி மோசடி: `மத்திய அரசின் அறிவிப்பே காரணம்!’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan

அரசு வேலைக்காக வசூலித்த பணத்தை அந்தப் பெண், மோகன்தாஸ், ராணி உட்பட அவர்களின் கூட்டாளிகள் பங்கு போட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பணம் கொடுத்த யாருக்கும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணம் கொடுத்த இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் முதற்கட்டமாக ஐந்து பேரைக் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் பெண் உட்பட சிலரைத் தேடிவருகிறோம். இது போன்ற மோசடிக் கும்பலிடம் அரசு வேலைக்காக யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு