Published:Updated:

வங்கியிலிருந்தே பின்தொடர்ந்த சிறுவர்கள்... ஒரு லட்சம் ரூபாயை பறிகொடுத்த நபர்! - என்ன நடந்தது?

பணம்

வங்கி முன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்ததைக் கவனித்த மூன்று சிறுவர்கள், ஒரு லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தனர். அவர்களை சிசிடிவி காட்சியின் உதவியோடு போலீஸார் 12 மணி நேரத்தில் பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

வங்கியிலிருந்தே பின்தொடர்ந்த சிறுவர்கள்... ஒரு லட்சம் ரூபாயை பறிகொடுத்த நபர்! - என்ன நடந்தது?

வங்கி முன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்ததைக் கவனித்த மூன்று சிறுவர்கள், ஒரு லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தனர். அவர்களை சிசிடிவி காட்சியின் உதவியோடு போலீஸார் 12 மணி நேரத்தில் பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Published:Updated:
பணம்

சென்னை கொடுங்கையூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் திருவழகு. இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 18.4.2022-ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் கொடுங்கையூர் ஆர்.வி நகரில் உள்ள தனியார் வங்கிக்கு சென்ற திருவழகு, அடகு வைத்த தன்னுடைய நகைகளை மீட்க விவரம் கேட்டுள்ளார். அப்போது வட்டி, அசலோடு சேர்த்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் திருவழகுவிடம் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அதனால் மீதி தேவைப்படும் பணத்துக்கு ஏற்பாடு செய்ய திருவழகு அவரின் மகளிடம் கேட்டுள்ளார். இதையடுத்து இருவரும் வங்கியின் வெளியில் தாங்கள் வைத்திருந்த பணத்தை எண்ணினர்.

வங்கி
வங்கி

பின்னர் பணத்தைச் செலுத்த வங்கிக்குள் சென்றபோது மதிய உணவு நேரமாகி விட்டதால் 2 மணிக்கு மேல் வரும்படி வங்கி ஊழியர் திருவழகுவிடம் தெரிவித்தார். இதையடுத்து திருவழகும் அவரின் மகளும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். கொடுங்கையூர் சேலை அம்மன் கோயில் பிரதான சாலையில் திருவழகுவை இறக்கி விட்ட அவரின் மகள் பைக்கில் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதனால் தனியாக திருவழகு பணத்துடன் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த மூன்று பேர், திருவழகு வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் அதிர்ச்சியடைந்த திருவழகு, திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். பின்னர், திருவழகு, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி-யில் விலை உயர்ந்த பைக்கில் மூன்று பேர் வந்து, திருவழகுவிடம் பணத்தை பறித்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. வாகன பதிவெண்ணை வைத்து பைக்கில் வந்தவர்கள் குறித்து விசாரித்தபோது பைக்கை ஓட்டி வந்தவனை போலீஸார் அடையாளம் கண்டனர். அவன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்ற விவரம் தெரியவந்தது.

CCTV
CCTV

இதையடுத்து அந்தச் சிறுவன் உட்பட அவனின் கூட்டாளிகளான வியாசர்பாடியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 13 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் பிடித்தனர். அவர்களிடமிருந்து பணம், விலை உயர்ந்த பைக், இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் திருவழகுவை வங்கியிலிருந்தே பின்தொடர்ந்து வந்து பணத்தைப் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் மூன்று சிறுவர்களிடமும் விசாரணை நடத்தியதில் கஞ்சா உள்ளிட்ட போதைக்காக பணத்தை வழிபறி செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism