Published:Updated:

சென்னை: தடகள வீராங்கனைகள் என அறியாத திருடன்; செல்போன் திருடனை விரட்டிப் பிடித்த கல்லூரி மாணவிகள்!

கமிஷனரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் மாணவிகள்

சென்னை பெரம்பூரில் செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை கல்லூரி மாணவிகள் விரட்டிப்பிடித்து செல்போனையும் மீட்டுள்ளனர்.

சென்னை: தடகள வீராங்கனைகள் என அறியாத திருடன்; செல்போன் திருடனை விரட்டிப் பிடித்த கல்லூரி மாணவிகள்!

சென்னை பெரம்பூரில் செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை கல்லூரி மாணவிகள் விரட்டிப்பிடித்து செல்போனையும் மீட்டுள்ளனர்.

Published:Updated:
கமிஷனரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் மாணவிகள்

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த தீபலட்சுமி (19), கல்பாக்கத்தைச் சேர்ந்த காயத்ரி (19) ஆகியோர் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் தடகள விளையாட்டு வீராங்கனைகள். கடந்த 8.4.2022-ம் தேதி, மாலை 3:30 மணியளவில் விளையாட்டுப் பயிற்சிக்காக பெரம்பூருக்கு மின்சார ரயிலில் சென்றனர். பின்னர் இருவரும் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது பின்னால் நடந்து வந்தவர், காயத்ரியின் செல்போனைப் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

செல்போன் திருடனை விரட்டிப் பிடித்த மாணவி தீபலட்சுமி
செல்போன் திருடனை விரட்டிப் பிடித்த மாணவி தீபலட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி காயத்ரி, விவரத்தை தன்னுடைய தோழி தீபலட்சுமியிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் சேர்ந்து செல்போன் திருடனை விரட்டினர். அப்போது திருடனின் கூட்டாளி, பைக்கில் தயாராக நின்றுகொண்டிருந்திருக்கிறார். அதை கவனித்த மாணவிகள், ``திருடன், திருடன்...’’ என்று சத்தம் போட்டபடி விரட்டினர். இரண்டு மாணவிகள் சத்தம் போட்டுக்கொண்டே ஓடுவதைப் பார்த்த பொதுமக்கள் செல்போன் திருடனைச் சுற்றிவளைத்தனர். அதனால் மாணவிகளின் பிடியில் திருடன் சிக்கிக்கொண்டான். இதையடுத்து அவனிடமிருந்த செல்போனை மீட்ட மாணவிகளும் பொதுமக்களும் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெரவள்ளூர் போலீஸார் செல்போனைப் பறித்த வழக்கில் கார்த்திக், அவனின் கூட்டாளி சூர்யா ஆகியோரைக் கைதுசெய்தனர். மாணவிகளின் துணிச்சலான இந்தச் செயலைப் பாராட்டிய சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism