Published:Updated:

சென்னை: `குப்பைத் தொட்டி அருகில் மனித எலும்புக் கூடு' - அதிர்ச்சியில் உறைந்த தூய்மைப் பணியாளர்!

எலும்புக் கூடு
எலும்புக் கூடு

சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி அருகில் பிளாஸ்டிக் கவரில் மனித எலும்புக் கூடு இருப்பதைக் கண்ட பெண் தூய்மைப் பணியாளர் அதிர்ச்சியடைந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை சாஸ்திரி நகர் முதல் மெயின் ரோடு 6-வது குறுக்குத் தெரு சந்திப்பில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் தங்கம் பழனி என்ற பெண், இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டார். குப்பைத் தொட்டி அருகில் கிடந்த பிளாஸ்டிக் கவர்களை அவர் எடுத்தபோது அதற்குள் மண்டை ஓடு, எலும்புகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் மனித எலும்புக் கூடு குறித்து தனியார் நிறுவன அதிகாரிக்கும் சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

மனித எலும்பு கூடு
மனித எலும்பு கூடு
பட்டுக்கோட்டை: மனைவியின் புகார்; தோண்டி எடுக்கப்பட்ட எலும்பு கூடு! - காப்பகத்தில் சிறுவன் கொலை?

உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். பிளாஸ்டிக் கவரிலிருந்த மனித எலும்புக் கூடுகளை மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த எலும்புக் கூடுகளை யார் இந்தப்பகுதியில் வீசிச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மனித எலும்புக் கூடுகளை யார் வீசினார்கள் என்று விசாரணை நடந்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு