Published:Updated:

சென்னை: "டார்ச்சர் செய்கிறார்" - அரசு மருத்துவமனை துறை தலைவர் மீது மனைவி போலீஸில் புகார்!

TN police
TN police

கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் தன்னை டார்ச்சர் செய்வதாக மருத்துவரின் மனைவி, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை கொளத்தூர், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் லதா (51). இவரின் கணவர் ராஜ்குமார். இவர், சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் துறை தலைவராக உள்ளார். "என் கணவர் மருத்துவர் ராஜ்குமாரின் தொல்லையால் என்னுடைய மகன் 6 மாதங்களுக்குமுன் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார். மேலும் என்னுடைய மகன் மீது கணவர் ராஜ்குமார் பொய்யான புகாரை காவல் நிலையத்தில் கொடுத்தார்.

மருத்துவர் மீது மனைவி  புகார்
மருத்துவர் மீது மனைவி புகார்

மருத்துவரான ராஜ்குமார், மாமனார் நடராஜன், மாமியார் சம்பூர்ணம், நாத்தனார்கள் தேன்மொழி, பூங்கோதை ஆகியோர் எனக்கு பல வகையில் தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளாலும் பேசுகின்றனர். அதனால் மனமுடைந்த நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்" என்று புகாரில் லதா குறிப்பிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் போலீஸார் மருத்துவர் ராஜ்குமார், அவரின் அப்பா, அம்மா, தங்கைகள் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

புகாரளித்த லதா நம்மிடம் பேசுகையில், ``என்னுடைய கணவர் மருத்துவர் ராஜ்குமாரின் நடவடிக்கைகளால் நானும் என் குழந்தைகளும் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். என் மகள், மருத்துவம் படித்துவருகிறார். அவளுக்குரிய கல்வி கட்டணத்தை செலுத்தாமல் இழுத்தடிக்கிறார். அதனால் அவளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மருத்துவர் ஒருவர் இப்படி நடந்துக் கொள்வதை வெளியில் சொல்ல முடியவில்லை. நாங்கள் குடியிருக்கும் வீட்டை கூட இரண்டாக பிரித்துவிட்டார். குழந்தைகளின் நலன்கருதி அமைதியாக இருந்து வந்தேன். ஆனால் மருத்துவர் ராஜ்குமார் மனம் மாறவில்லை. வேறுவழியின்றி எங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறேன்" என்றார்.

`வயிற்றுக்குள் நுழைந்த குவார்ட்டர் பாட்டில்!’ -அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றிய அரசு மருத்துவர்

லதாவின் மகனான இன்ஜினீயர், தன்னுடைய தந்தை மீது சில ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதற்கான ஆதாரங்கள் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் இருப்பதாக அவர் நம்மிடம் தெரிவித்தார். மருத்துவர் ராஜ்குமார் மீது அவரின் மகன், மனைவி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க பல தடவை முயற்சி செய்தோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.

சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துறை தலைவராக பணியாற்றும் மருத்துவர் ராஜ்குமார், அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு