Published:Updated:

சென்னை: பூட்டிக்கிடந்த வீட்டின் அறையில் மனித எலும்புக்கூடு; போலீஸ் விசாரணை!

எலும்புக்கூடு
எலும்புக்கூடு

சென்னை அமைந்தகரையில் நீண்டகாலமாகப் பூட்டிக்கிடந்த அறையை வீட்டிலுள்ளவர்கள் சுத்தம் செய்தபோது அங்கு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி, 3-வது தெருவிலுள்ள 3,600 சதுர அடியில் பெரிய வீடு உள்ளது. அந்த வீடு தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே சொத்துப் பிரச்னை இருந்துவருகிறது. இந்தநிலையில் வீட்டை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் இன்று சுத்தம் செய்தார். அப்போது நீண்டகாலமாக பூட்டியே கிடந்த ஓர் அறையைத் திறந்து சுத்தம் செய்தபோது மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ், அமைந்தகரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மனித எலும்புக்கூட்டை மீட்டனர். இறந்தவர் யாரென்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பத்தூர்: 'புதரில் எரிந்துகிடந்த பெண் சடலம்' - கொலையாளிகளைப் பிடிக்க போலீஸ் தீவிரம்!
வீட்டின் முன் குவிந்த கூட்டம்
வீட்டின் முன் குவிந்த கூட்டம்

மகேஷிடம் விசாரித்தபோது அவர், தன்னுடைய சகோதரர் ரமேஷ் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காணவில்லை. அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரமேஷுக்கும் எங்களுடைய தாய்மாமன் ஒருவருக்கும் இந்த வீடு தொடர்பாக சொத்து பிரச்னை இருந்துவந்தது. அதனால் ரமேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து மனித எலும்புக்கூடு யாருடையது என்பதைத் தடயவியல் நிபுணர்கள் மூலம் கண்டறிய போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். இது குறித்து அமைந்தகரை போலீஸாரிடம் கேட்டபோது, ``பயன்படுத்தப்படாத அறை ஒன்றில் கிடந்த மனித எலும்புக்கூடு ஒன்றை மீட்டு ஆய்வுக்காக அனுப்பியிருக்கிறோம். அந்த எலும்புக்கூடு குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

சென்னை அமைந்தகரையில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக பரவிய தகவலையடுத்து ஏராளமானவர்கள் அந்த வீட்டின் முன் குவிந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு