Published:Updated:

`அனுமதியின்றி நுழைய தடை செய்யப்பட்ட பகுதி!'- சென்னை ராணுவ வளாகத்துக்குள் எகிறிகுதித்த மர்மநபர்?

ராணுவ வளாகம்
ராணுவ வளாகம்

ராணுவ வளாகத்துக்குள் எகிறி குதித்துக் கைதான மர்மநபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி செயல்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் இணைபவர்களுக்கு என பிரத்யேகப் பயிற்சியை இந்தப் பள்ளி அளிக்கிறது. சென்னை விமானநிலையத்துக்கு அருகே சுமார் 750 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள இந்த ராணுவப் பள்ளி, 1963-ல் இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட பெருமைக்கு உரியது. இந்தப் பள்ளிக்குள் அனுமதியின்றி நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதால், எப்போதுமே துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

`அனுமதியின்றி நுழைய தடை செய்யப்பட்ட பகுதி!'-  சென்னை ராணுவ வளாகத்துக்குள் எகிறிகுதித்த மர்மநபர்?

நேற்றிரவு 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இப்பள்ளியின் மதில்சுவரின் மீது ஏறிக் குதித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த ராணுவ வீரர்கள், இருட்டில் ஒரு நபர் வேகமாகப் பள்ளி வளாகத்துக்குள் ஓடுவதைக் கண்டு, அவரை விரட்டிப் பிடித்துள்ளனர். ராணுவ வீரர்கள் விசாரிக்கையில் அந்தநபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கவே, பரங்கிமலை போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது பரங்கிமலை போலீஸாரின் கட்டுப்பாட்டிலுள்ள அந்த மர்மநபர் மனநலம் சரியில்லாதவர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை!'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா

இதுகுறித்து பரங்கிமலை போலீஸாரிடம் விசாரித்தோம். ``சம்பந்தப்பட்ட மர்மநபர் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தனது பெயரை மாற்றி மாற்றிக் கூறுவதால், அவரின் உண்மையான பெயர் தெரியவில்லை. எங்கள் விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

கைது
கைது

ராணுவப் பள்ளிக்கு அருகிலேயே சென்னை சர்வதேச விமானநிலையம் உள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட்ட அந்தப் பகுதிக்குள் அந்த மர்மநபர் எப்படி வந்தார்? அவருடன் வேறு யாராவது வந்தார்களா? என சிசிடிவி கேமராக்கள் துணையுடன் விசாரணை சூடுபிடித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட ராணுவ பகுதிக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்தாலே அவர்களைச் சுட்டுப் பிடிப்பதற்கு ராணுவத்துக்கு அதிகாரமுள்ள நிலையில், ராணுவ வளாகத்துக்குள் மர்ம நபர் ஒருவர் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு