Published:Updated:

300 பக்க அறிக்கை; 81 சாட்சிகள்; தூக்குத் தண்டனைக்கு மேல்முறையீடு! -அயனாவரம் சிறுமி வழக்கின் சவால்கள்

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவர்கள்
News
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேல்முறையீடு செய்ய உள்ளதாக துணை கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் (56), பிளம்பர் சுரேஷ் (32), வீட்டு வேலைக்காரர் ராஜசேகர் (48), காவலாளிகள் எரால்பிராஸ் (58), அபிஷேக் ( 28), சுகுமாரன் (60) , முருகேசன் (54), லிப்ட் ஆபரேட்டர் பரமசிவம் (60), பிளம்பர் ஜெய்கணேஷ் (23), லிப்ட் ஆபரேட்டர் பாபு(36) (இறந்துவிட்டார்), காவலாளி பழனி(40), லிப்ட் ஆபரேட்டர் தீனதயாளன் (50), பிளம்பர்கள் ராஜா (32), சூர்யா(23), தோட்டப் பணியாளர் குணசேகரன் (55), வீட்டு வேலைக்காரர் ஜெயராமன்(26), எலெக்ட்ரீசியன் உமாபதி (42) ஆகியோரை அயனாவரம் மகளிர் போலீஸார் கைதுசெய்தனர்.

அயனாவரம் வழக்கில் கைதானவர்
அயனாவரம் வழக்கில் கைதானவர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் பிப்ரவரி 1-ம் தேதி நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சுமத்தப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உயிரிழந்துவிட்டார். அதனால் 16 பேரில் தோட்டக்காரர் குணசேகர் விடுதலை செய்யப்படுகிறார். மீதமுள்ள 15 பேரும் குற்றவாளிகள்' என்று கூறினார். இவர்களுக்கான தண்டனை விவரத்தை பிப்ரவரி 3-ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார். அதன்படி, `முதல் குற்றவாளியான ரவிக்குமாருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு போக்ஸோ சட்டத்தின் இன்னொரு பிரிவின்கீழ் 7 ஆண்டுகள் சிறையும் கொலை மிரட்டல் பிரிவின் கீழ் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

போக்ஸோ சட்டத்தின்கீழ் குற்றவாளிகள் சுரேஷ், அபிஷேக், பழனி, ராஜசேகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. காவலாளி எரால் பிராஸிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்ற 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது' என நீதிபதி மஞ்சுளா தண்டனை விவரத்தை அறிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து குற்றவாளிகள் புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அயனாவரம் வழக்கில் கைதானவர்
அயனாவரம் வழக்கில் கைதானவர்

இந்த வழக்கில் திறம்படச் செயல்பட்ட துணை கமிஷனர் ராஜேந்திரன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், ``இந்த வழக்கில் 300 பக்க விசாரணை அறிக்கையும் 81 சாட்சிகளும் இடம் பெற்றியிருந்தனர். சாட்சிகளில் ஒருவர்கூட நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி அளிக்கவில்லை.

இந்த வழக்குப் பதிவானதும் பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்து விசாரித்தோம். அப்போது போலீஸாரைப் பார்த்து பயப்படாமலிருக்க கவுன்சிலர் ஒருவரையும் சிறுமிக்கு உதவியாக வைத்திருந்தோம். அதனால் சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை இயல்பாகத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கில் மிகப்பெரிய சவால் என்னவென்றால் 17 குற்றவாளிகள்தான். இதில், அரசுத் தரப்பு சாட்சிகள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் சிசிடிவி ஆதாரம் நிறைய இடங்களில் கிடைக்கவில்லை. சாட்சிகளில் பலர் குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள். அதனால் அவர்கள் முதலில் சாட்சி சொல்லவே யோசித்தார்கள்.

அயனாவரம் வழக்கில் கைதானவர்
அயனாவரம் வழக்கில் கைதானவர்

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் மருத்துவப் பின்னணியைக் கொண்டவர். அவர் மருந்துக் கடை, லேப்பில் வேலை பார்த்தவர். பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு ஊசி போட்டதாகக் கூறும்போது அந்தக் குற்றவாளியின் முழுத் தகவல்களையும் சேகரித்து நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தோம். இந்த வழக்கில் 15 குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு நகல் கிடைத்ததும் 15வது குற்றவாளியான குணசேகரன் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என ஆலோசிக்கப்படும். மேலும், அவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். அதேசமயத்தில் ஆயுள் தண்டனை, சாகும் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரவிக்குமார் சுரேஷ் அபிஷேக் பழனி ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை கிடைப்பதற்கு மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். அதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகாவுடன் அரசு வழக்கறிஞர் ரமேஷ்
இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகாவுடன் அரசு வழக்கறிஞர் ரமேஷ்

இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகாவின் பணியைப் பாராட்ட வேண்டும். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். இன்ஸ்பெக்டருக்கு உதவியாக ராபின்சன் என்ற எஸ்.எஸ் ஐ இருந்தார். பொதுவாக குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கவனிக்க வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர் நட்போடு பழக வேண்டும்" என்றார்.

அரசு வழக்கறிஞர் ரமேஷ் பேசுகையில், ``அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்ஸோ நீதிமன்றம் விதித்த தண்டனை குறித்து காவல்துறையுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும்" என்றார்.