Published:Updated:

பாலியல் தொழில்; பண விவகாரம்; கழிவறையிலிருந்து காவலன் செயலிக்கு தகவல் கொடுத்த பெண்கள் - நடந்தது என்ன?

காவலன் செயலி

`சென்னை வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியின் கழிவறையில் ஆபத்திலிருக்கிறோம்' என இளம்பெண்கள் காவலன் செயலி மூலம் காவல்துறையின் உதவியை நாடினர்.

பாலியல் தொழில்; பண விவகாரம்; கழிவறையிலிருந்து காவலன் செயலிக்கு தகவல் கொடுத்த பெண்கள் - நடந்தது என்ன?

`சென்னை வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியின் கழிவறையில் ஆபத்திலிருக்கிறோம்' என இளம்பெண்கள் காவலன் செயலி மூலம் காவல்துறையின் உதவியை நாடினர்.

Published:Updated:
காவலன் செயலி

சென்னை, வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியில் உள்ள கழிவறையிலிருந்து இளம்பெண் ஒருவர், காவலன் செயலி மூலம் காவல்துறையினரின் உதவியை நாடினார். அப்போது அந்தப் பெண், `நான் ஆபத்திலிருக்கிறேன் என்னைக் காப்பாற்றுங்கள்' என்று தெரிவித்தார். அந்தப் பெண்ணுக்கு ஆறுதல், தைரியம் கூறிய காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார், வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் அங்கு சென்றபோது கழிவறைக்குள் இளம்பெண் ஒருவரும், அந்த அறைக்குள் இளைஞர் ஒருவரும் இருந்தனர். நிலைமையை தெரிந்துகொண்ட போலீஸார் இருவரிடமும் விசாரித்தனர். அப்போது இன்னொரு அறையில் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் இருப்பது தெரியவந்தது. அதனால் நான்கு பேரையும் அழைத்துக்கொண்டு போலீஸார் வேளச்சேரி காவல் நிலையத்துக்குச் சென்றனர்.

காவலன் ' SOS'
காவலன் ' SOS'

காவலன் செயலி மூலம் உதவி கேட்ட இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், ``நானும் இன்னொரு அறையிலிருந்த இளம்பெண்ணும் பாலியல் தொழில் செய்து வருகிறோம். செல்போன் ஆப் மூலம் எங்களுடன் சந்தோஷமாக இருக்க 22,000 ரூபாயை இந்த இரண்டு இளைஞர்கள் கொடுத்தனர். பின்னர் கோயம்பேடு பகுதியிலிருந்து எங்களை கார் மூலம் வேளச்சேரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் நாங்கள் இருவரும் எங்களின் பார்ட்னர்களுடன் அறைக்குச் சென்றுவிட்டோம். அப்போது என்னுடன் தங்கியிருந்த இளைஞர், ஒரு தடவை சந்தோஷமாக இருந்தார். பின்னர் மீண்டும் என்னுடன் சந்தோஷமாக இருக்க என்னைக் கட்டாயப்படுத்தினார். அவர் ஒரு தடவை மட்டுமே சந்தோஷமாக இருக்க எங்களுக்கு பணம் கொடுத்திருந்தார். அதை நான் அவரிடம் தெரிவித்தபோது என்னை மிரட்டினார். அதனால்தான் நான் கழிவறைக்குச் சென்று காவலன் செயலி மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தேன்" என்று கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைக் கேட்ட போலீஸார், சம்பந்தப்பட்ட இளைஞரிடம் விசாரித்தனர். அப்போது அவர், ``என்னுடன் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லிவிட்டு பணத்தையும் அதிகமாக வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்" எனத் தெரிவித்தார். அதையடுத்து போலீஸார், இரண்டு இளம்பெண்களையும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர்.

பாலியல் தொழில்
பாலியல் தொழில்

இந்தச் சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீஸாரிடம் கேட்டதற்கு, ``இது ஒரு சட்டசிக்கலான பிரச்னை. பாலியல் தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட பெண் கொடுத்திருந்தால் சட்டப்படி இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால், விருப்பப்பட்டே அவர்கள் நான்கு பேரும் சென்றிருக்கின்றனர். பணம் கொடுப்பதில்தான் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரில் ஒருவன், உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இன்னொருவன் பேராசிரியரின் நண்பன். இவர்கள் இருவரும் செல்போனில் உள்ள ஒரு ஆப் மூலம் பணத்தைச் செலுத்திச் சென்றிருக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவத்தில் ஆபத்து எனத் தெரிந்ததும் இளம்பெண் ஒருவர் காவலன் செயலியை பயன்படுத்தியதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிந்தது" என்றனர்.