Published:Updated:

சென்னை: பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,00,85,120 - இளைஞர்கள் போலீஸில் சிக்கியது எப்படி?

பணம்

சென்னையில் பைக்கில் கொண்டு சென்ற 1,00,85,120 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை: பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,00,85,120 - இளைஞர்கள் போலீஸில் சிக்கியது எப்படி?

சென்னையில் பைக்கில் கொண்டு சென்ற 1,00,85,120 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Published:Updated:
பணம்

சென்னை பூக்கடை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலக சாலையில் போலீஸார் கடந்த 31.8.2022-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் இரண்டு பேர் வந்தனர். அவர்கள், போலீஸாரைப் பார்த்ததும் வேறு வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். அதைக் கவனித்த போலீஸார் பைக்கில் சென்றவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.

போலீஸாரின் வாகனச் சோதனை
போலீஸாரின் வாகனச் சோதனை
file photos

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை போலீஸார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அது குறித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் எந்தவித பதிலும் சொல்லவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் வாகனச் சோதனையில் சிக்கியவர்கள் மண்ணடியைச் சேர்ந்த அம்ஜத்கான், செங்குன்றனத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பர்மா பஜாரில் வேலை செய்து வருகின்றனர். இவர்களிடமிருந்து 1,00,85,120 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பிறகு பணத்தை போலீஸார் வருமான வரித்துறை, புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இவ்வளவு பணம் சிக்கியதால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.