Published:Updated:

`காய்கறி வாங்க டிராவல் பேக்; இளைஞரிடம் ரூ.17 லட்சம்’- சென்னையில் ஹவாலா பணமா?

டிராவல் பேக்கில் இருந்த பணம்
டிராவல் பேக்கில் இருந்த பணம்

சென்னை மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, காய்கறி வாங்கச் செல்வதாகக் கூறி டிராவல் பேக்குடன் சென்ற இளைஞரைப் பிடித்து போலீஸார் சோதனை செய்தபோது 17.79 லட்ச ரூபாய் சிக்கியது.

சென்னையில், கொரோனா ஊரடங்கையொட்டி போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று காலை 11.30 மணியளவில், பாரிமுனை பிராட்வே சாலை மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கறுப்பு நிற டிராவல் பேக்கை தூக்கிக்கொண்டு இளைஞர் ஒருவர் நடந்துவந்துள்ளார்.

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு
தே.அசோக்குமார்
கடந்த 19-ம் தேதி, பாரிமுனையில் தொண்டியைச் சேர்ந்த நத்தர் சாகிப் (32) என்பவரிடமிருந்து 99 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து, அந்தப் பணத்தையும் ஐ.டி-யிடம் ஒப்படைத்தோம். தற்போது மொய்தீன் தம்பியிடமிருந்து பறிமுதல் செய்த பணத்தையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம்.
போலீஸ்

அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் காய்கறி வாங்கச் செல்கிறேன் என்று கூறினார். அதைக்கேட்டு போலீஸார் சந்தேகமடைந்தனர். டிராவல் பேக்கில் யார் காய்கறி வாங்கச் செல்வார்கள் என்று கருதிய போலீஸார், அந்த இளைஞரிடம் விசாரித்தனர். அப்போது அவர் போலீஸாரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்து, அந்த இளைஞர் வைத்திருந்த டிராவல் பேக்கை திறந்து பார்த்தனர். உள்ளே கட்டுக்கட்டாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.

உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவரின் பெயர் மொய்தீன் தம்பி (26), தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. போலீஸார் பணத்தை எண்ணிப்பார்த்தபோது 8 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

பிறந்தநாள் மூலம் பரவிய கொரோனா! -தி.மு.க பிரமுகரால் அதிர்ச்சியில்  அதிகாரிகள்
பணம்
பணம்

பணம் குறித்து மொய்தீன் தம்பியிடம் விசாரித்தபோது, அவரிடம் பணத்துக்குரிய எந்தவித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, போலீஸார் பணத்தை பறிமுதல் செய்தனர். மொய்தீன் தம்பியிடம் பணத்தை எண்ணும் இயந்திரமும் இருந்தது. அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மொய்தீன் தம்பியிடமிருந்து பறிமுதல் செய்த பணத்தை போலீஸார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த 19-ம் தேதி, பாரிமுனையில் தொண்டியைச் சேர்ந்த நத்தர் சாகிப் (32) என்பவரிடம் இருந்து 99 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து, ஐ.டி -யிடம் ஒப்படைத்தோம். தற்போது, மொய்தீன் தம்பியிடமிருந்து பறிமுதல்செய்த பணத்தையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம்.

ரூபாய் நோட்டுக்கள்
ரூபாய் நோட்டுக்கள்
Vikatan

ஊரடங்கையொட்டி நடத்தப்படும் வாகனச் சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது. லட்சக்கணக்கில் பணம் சிக்குவதால் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளோம்" என்றனர்.

பாரிமுனையில் ஹவாலா கும்பலின் நடமாட்டம் உள்ளதா என்ற சந்தேகமும் போலீஸாருக்கும் ஐ.டி-க்கும் எழுந்துள்ளது. அதுதொடர்பான ரகசிய விசாரணை நடந்துவருகிறது. பணத்துடன் சிக்கியவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு