Published:Updated:

`பெண் குரலில் வலை; வெளிநாட்டு கஸ்டமர்கள்!' -சென்னை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நெல்லை இன்ஜினீயர்

 வளன் ராஜ்குமார் ரீகன்
வளன் ராஜ்குமார் ரீகன்

செல்போனில் பெண் குரலில் பேசி லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய நெல்லை இன்ஜீனியரின் பின்னணியைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த வளன் ராஜ்குமார் ரீகன் (24) என்பவரை மயிலாப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர், பெண் குரல் மூலம் பலரை ஏமாற்றி பணத்தைப் பறித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த வளன் ராஜ்குமார் ரீகன், வேலைக்காக சென்னை வந்தார். சென்னையில் பணியாற்றிய அவர், குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பணக்காரனாகத் திட்டமிட்டார். இந்தச் சமயத்தில்தான் `லொக்கேண்டா' என்ற செயலி குறித்த தகவல் வளனுக்குத் தெரியவந்தது.

வளன் ராஜ்குமார் ரீகன்
வளன் ராஜ்குமார் ரீகன்
`தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா?!' -பெண் குரலில் பேசி லட்சங்களைக் குவித்த நெல்லை இன்ஜினீயர்

இந்தச் செயலியில் பதிவு செய்தால் என்ன தேவைக்காகப் பதிவு செய்கிறோமோ, அந்தத் தேவை நிறைவேற்றப்படும். எடுத்துக்காட்டாக சந்தோஷமாகப் பேச வேண்டும் என்றால் அதற்கென ஒரு செல்போன் நம்பர் கொடுக்கப்படும். (நீங்கள் ஆணாக இருந்தால் பெண்ணின் நம்பரும் பெண்ணாக இருந்தால் ஆணின் நம்பரும் பகிரப்படும்). அந்த நம்பரில் பேசினால் உங்கள் விருப்பப்படி எதிர்முனையில் இருப்பவர்கள் பேசுவார்கள். வளன் ராஜ்குமாரும் அந்தச் செயலி மூலம் சிலரிடம் பேசினார். வளனின் குரல், பெண் குரல் போல இருந்ததால் அவருடன் ஏராளமான ஆண்கள் பேசியுள்ளனர். அவர்களிடம் பாலியல்ரீதியாகவும் பேசியிருக்கிறார். இதனால் வளனின் செல்போன் நம்பர் 24 மணி நேரமும் பிஸியானது.

வளன் ராஜ்குமாரிடம் பேசிய ஆண்கள், போட்டோ, வீடியோவை அனுப்பும்படி கேட்கத் தொடங்கினர். அப்போது அழகான பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களை வளன் அனுப்பி வைத்தார். பின்னர் அதை பிசினஸாக மாற்றிப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டார். அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்ப 100 ரூபாய் கட்டணமாக வசூலித்தார் வளன். வீடியோ என்றால் ஆயிரக்கணக்கில் வசூலிக்கத் தொடங்கினார். வளன் சொல்லும் அக்கவுன்ட் நம்பருக்குப் பலரும் பணத்தை அனுப்பத் தொடங்கினர். சுமார் 3 ஆண்டுகளாக, பெண் குரலில் பேசி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.

பிரியா பெயரில் வாட்ஸ்அப்பில் புகார்
பிரியா பெயரில் வாட்ஸ்அப்பில் புகார்
`பெண் குரலில் காதல் வலை; சிக்கிய ஈரோடு இளைஞர்!' -மாஸ்டர் பிளான் போட்ட பட்டதாரிகளுக்கு நேர்ந்த சோகம்

அந்தப் பணத்தில் சொந்த ஊரில் பங்களா டைப்பில் வீடு, சொகுசு கார் என ஆடம்பரமான வாழ்க்கையை நடத்திவந்துள்ளார். இதனால் சென்னையில் பார்த்த வேலையை உதறிவிட்டு சொந்த ஊரில் செட்டிலாகிவிட்டார். தினமும் ஆயிரக்கணக்கில் அவரின் வங்கிக்கணக்கில் பணம் குவிந்தது.

அதை வைத்து விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். பணம் தராமல் எதிர்ப்பவர்கள் மீது ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் அளித்தார். அதற்கு அவர் பயன்படுத்திய பெயர் பிரியா, பிரியதர்ஷினி. பணம் தராதவர்களின் செல்போன் நம்பரை அந்தப் புகாரில் வளன் குறிப்பிடுவது வழக்கம். அந்த நம்பருக்குக் காவல் நிலையத்திலிருந்து போன் சென்றதும் சம்பந்தப்பட்டவர்கள் வளனிடம் தங்களை மன்னித்துப் புகாரை வாபஸ் பெறும்படி கெஞ்சியுள்ளனர். அதற்காக வளன் கேட்ட தொகைகையும் கொடுத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வளனிடம் ஏமாந்தவர்களின் பட்டியல் ஆயிரத்தைத் தாண்டும். ஆனால் யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

காவல் நிலையத்தில் வளன் விசாரணையில் இருந்தபோது அவருக்கு ஏராளமான போன் அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசியவர்கள், `உன் குரல் ஏன் டல்லாக உள்ளது. பணத்தேவை என்றால் என்னிடம் கேள்' என்று கூறியுள்ளனர். கனடாவிலிருந்து பேசிய ஒருவர், தன்னுடைய ஏடிஎம் கார்டு, விவரத்தை வளனின் செல்போன் நம்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். துபாயிலிருந்து பேசிய ஒருவர், வாட்ஸ்அப்பில் வளனுக்கு டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை அனுப்பி வைத்தார். இதைப்பார்த்த போலீஸார், வளனிடம் விசாரித்தனர்.

நெல்லை இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்
நெல்லை இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்
`நாங்க போலீஸ்.. உங்க நகை பத்திரம்..!' -திருச்சி பெண்களைக் குறிவைக்கும் நூதன வழிப்பறிக் கும்பல்

அப்போது வளன், எனக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். வளனுக்கு போன் செய்தவர்கள் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். வளனால் ஏமாந்தவர்கள் தங்களின் விவரங்கள் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி அமைதியாக உள்ளனர்.

வளனின் வங்கிக் கணக்கை போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் 100 ரூபாய் தொடங்கி ஆயிரக்கணக்கில் பணம் விழுந்தவண்ணம் உள்ளது. தற்போது அவரின் வங்கிக் கணக்கில் மட்டும் சில லட்சம் ரூபாய்கள் உள்ளன. எனவே, வளனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு