Published:Updated:

`துரோகத்தால் வாழ்க்கை சீரழிந்துவிட்டது' என்றார்! - பெண் இன்ஜினீயர் புகாரால் கொதிக்கும் போலீஸ் எஸ்.ஐ

போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்

என்னுடைய உறவினர் பெங்களூருவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவரைக் காணவில்லை. அதனால் பானுரேகாவின் உதவியை நாடினேன். பெங்களூருவுக்குச் சென்று பானுரேகாவைச் சந்தித்தேன்.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்த இன்ஜினீயர் பானுரேகா, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கமிஷனர் அலுவலகத்தில் புகாராகக் கொடுத்தார். பானுரேகாவின் புகார் தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடம் பேசினோம்.

``நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில்தான் சின்னவயதில் குடியிருந்தோம். பானுரேகாவின் நண்பர்கள் எனக்கும் நண்பர்கள். ஆனால் அவர்களைவிட நான் சீனியர். இந்தச் சமயத்தில் பானுரேகாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். 1993-ல் எனக்கு போலீஸ் வேலை கிடைத்தது.

பானுரேகா
பானுரேகா

நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் நானும் பானுரேகாவும் 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். திருமணத்துக்குப் பிறகு தனித்தனியாக வாழ்ந்துவந்தோம். தரமணியில் பானுரேகா வேலை பார்த்தபோதுதான் சீனிவாசனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவல் எனக்கு கிடைத்ததும் பானுரேகாவின் சித்தி வீட்டுக்குச் சென்றேன். 1994 முதல் 1997-ம் ஆண்டு வரை மது அருந்தினேன். பானுரேகாவை மறக்க முடியாமல் 2 தடவை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். சீனிவாசன் திருமணமானவர் என்பதால் அவரின் முதல் மனைவி காவல் நிலையத்துக்குச் சென்றார். முதல் மனைவியின் புகாருக்குப் பிறகு சீனிவாசன், பானுரேகாவை விட்டு பிரிந்துச் சென்றுவிட்டார். சீனிவாசனுக்கும் பானுரேகாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது.

இதன்பிறகு சென்னையில் உள்ள பிரபலமான கடையில் வேலை பார்த்து வந்த முருகானந்தம் என்பவரை பானுரேகா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் பிறந்தான். பானுரேகா எனக்கு செய்த துரோகத்துக்குப்பிறகு அவளை நான் சந்திக்கவில்லை. 1997-ல் எனக்கு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பெங்களூருவில் பானுரேகா குடியிருந்த சமயத்தில் மீண்டும் என்னுடன் போனில் பேசத் தொடங்கினார். அப்போது அவர் என்னிடம், `நான் உனக்கு செய்த துரோகத்தால் என்னுடைய 2 திருமண வாழ்க்கையும் நல்லபடியாக அமையவில்லை' என்றும் `தனிமரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்றும் கண்ணீர்மல்க கூறினார்.

`போலீஸ் எஸ்.ஐ-யால் வாழ்க்கையே நரகமாகிவிட்டது!' -சென்னைக் கமிஷனரிடம் புகாரளித்த இன்ஜினீயர் மனைவி
பானுவுடன் போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்
பானுவுடன் போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்

என்னுடைய உறவினர் பெங்களூருவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவரைக் காணவில்லை. அதனால் பானுரேகாவின் உதவியை நாடினேன். பெங்களூருவுக்குச் சென்று பானுரேகாவைச் சந்தித்தேன். அங்கு அவருக்குத் தாலிகட்டினேன். அதன்பிறகுதான் பானுரேகாவுக்கும் முருகானந்தத்துக்கும் இடையே பழக்கம் இருந்துவருவது தெரிந்தது. தற்போது பானுரேகா, மருத்துவத்துறையில் பணியாற்றிவருகிறார். பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார். சென்னை வந்தப் பிறகு, எனக்கு அதிகளவில் டார்ச்சர் கொடுக்கத் தொடங்கினார். வாட்ஸ்அப் காலில் என் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தினார் பானுரேகா.

பானுரேகாவிடம் நண்பர்கள், உறவினர்கள் மூலம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தேன். 2020-ம் ஆண்டு மே மாதத்துக்குள் குடும்பத்தைவிட்டு வரும்படி என்னை மிரட்டினார். அதற்கான போன் உரையாடல் ஆதாரமாக என்னிடம் உள்ளது. நான் வேலைபார்க்கும் காசிமேடு காவல் நிலையத்துக்கு வந்து என்னை அவமானப்படுத்தினார். இதையடுத்து சட்டரீதியாக பானுரேகாவின் பிரச்னைக்குத் தீர்வு காண முடிவு செய்தேன். இதனால் சென்னை நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்

நான், தொடர்ந்து சபரிமலைக்குச் சென்றுவருகிறேன். ஆனால், இந்த ஆண்டு என்னை மலைக்குச் செல்லவிடாமல் பானுரேகா தடுத்துவிட்டார். தேவைப்படும்போது குழந்தைகளிடம் என்னை கெட்டவனாகக் காட்டுவார் பானுரேகா. அவரின் தொல்லை காரணமாக அவரின் நம்பரை பிளாக் செய்தேன். இதன்பிறகு சூட்கேஸுடன் காவல் நிலையத்துக்கு வந்து தகராறு செய்தார்.

பானுரேகாவின் வழக்கை சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளேன். எனக்கும் சில பெண்களுக்கும் பழக்கம் இருப்பதாக அவர் சொல்கிறார். அதற்கு அவரிடம் ஆதாரம் உள்ளதா. எனக்குக் கொலை மிரட்டல் விடுத்துவருகிறார். தன்னுடைய ஹேண்ட் பேக்கில் மிளகாய் பொடி மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தும் பிளேடு இருக்கிறது என்றும் கூறிவருகிறார். அதனால்தான் பானுரேகா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். சில மாதங்களுக்குமுன் என் பி.எஃப் பணத்தில் 3,00,000 ரூபாயை லோன் போட்டு பானுரேகாவிடம் கொடுத்துள்ளேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு