Published:Updated:

சென்னை: கல்லூரி மாணவிக்கு ஏழு ஆண்டுகளாக பாலியல் டார்ச்சர் - போலீஸ் எஸ்.ஐ சிக்கியது எப்படி?!

மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக பாலியல் டார்ச்சர் கொடுத்த குற்றச்சாட்டில் போலீஸ் எஸ்.ஐ பாண்டியராஜ் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: கல்லூரி மாணவிக்கு ஏழு ஆண்டுகளாக பாலியல் டார்ச்சர் - போலீஸ் எஸ்.ஐ சிக்கியது எப்படி?!

சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக பாலியல் டார்ச்சர் கொடுத்த குற்றச்சாட்டில் போலீஸ் எஸ்.ஐ பாண்டியராஜ் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன் கல்லூரி மாணவி, தன்னுடைய அம்மாவுடன் வந்திருந்தார். மாணவியிடம் போலீஸார் விசாரித்தபோது தன்னுடைய அம்மாவுக்குத் தெரிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ், கடந்த ஏழு ஆண்டுகளாக பாலியல் தொல்லைக் கொடுத்து வருவதாக கண்ணீர்மல்க கூறினார். இதையடுத்து மகளிர் போலீஸார், மாணவியிடம் எழுத்துபூர்வமாக புகாரைப் பெற்று காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதனால், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் குற்றச்சாட்டில் சிக்கியிருந்தாலும் பாரபட்சமின்றி அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

மாணவிக்குப் பாலியல் தொல்லை
மாணவிக்குப் பாலியல் தொல்லை

இதையடுத்து மாணவி குற்றம் சுமத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மாணவிக்கு அவர் பாலியல் டார்ச்சர் கொடுத்தது தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கம் போலீஸாரிடம் பேசினோம். ``சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ், வி.ஐ.பி-க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையில் கணவரைப் பிரிந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதனால் அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் சென்று வந்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அந்தப் பெண்ணின் மகளுடனும் பாண்டியராஜ் பழகி வந்துள்ளார். இந்தநிலையில் அந்தப் பெண்ணின் 13 வயது மகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அது கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணின் மகளுக்கு 20 வயதாகுகிறது. அவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜின் பாலியல் டார்ச்சரைத் தாங்க முடியாத மாணவி, தன்னுடைய அம்மாவிடம் விவரத்தைக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் அம்மா, தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ்

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை, கவுன்சலிங் அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்" என்றனர்.

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``மாணவி தரப்பில் திட்டமிட்டே இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது இப்போது புகாரளித்திருக்கும் மாணவி, ஏன் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தத் தகவலை வெளியில் சொல்லவில்லை. எனவே இந்தப் புகாரின் பின்னணியை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்கிறார்கள்.