Election bannerElection banner
Published:Updated:

சென்னை: மாயமான 3 சவரன் கைச் செயின் - காட்டிக் கொடுத்த சிசிடிவி

கை செயின் மாயமானதால் புகாரளிக்கப்பட்ட  காவல்நிலையம்
கை செயின் மாயமானதால் புகாரளிக்கப்பட்ட காவல்நிலையம்

பிறந்தநாளையொட்டி கோயிலுக்குச் சென்றவரின் கைச் செயின் தொலைந்து போனது. அதை சிசிடிவி மூலம் போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

சென்னை கண்ணகி நகர், சந்திரசேகரன் அவென்யூ, 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (30). இவருக்கு கடந்த 14-ம் தேதி பிறந்தநாள். அதனால் காலை 11.30 மணியளவில் கோயிலுக்குச் சென்றார். பின்னர் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 3 சவரன் கைச் செயினைக் காணவில்லை. பிறந்தநாளன்று கை செயின் காணாமல் போனதால் மணிவண்ணன் வருத்தமடைந்தார். பின்னர் பல இடங்களில் அவர் தேடியும் கைச் செயின் கிடைக்கவில்லை.

சிசிடிவி
சிசிடிவி
representational image

இதையடுத்து மணிவண்ணன், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், மணிவண்ணன் எங்கெல்லாம் சென்றார் என்ற விவரத்தை கேட்டறிந்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மணிவண்ணன் கையிலிருந்த செயின் கீழே விழுந்தது தெரியவந்தது. அதை ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்ததது.

`சித்ரா திருமணம் தொடர்பாக சில மிரட்டல்கள்?!’ - சிசிடிவி வீடியோவுடன் புகாரளித்த ஹேமந்த் தந்தை

இதையடுத்து அந்த நபர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். அவர் குறித்த விவரங்கள் கிடைத்ததும் வீட்டுக்குச் சென்று கைச் செயின் குறித்து போலீஸார் விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று அந்த நபர் பதிலளித்தார். அப்போது போலீஸார் சிசிடிவி பதிவுகளை அவரிடம் காண்பித்தனர். அதன்பிறகு அந்த நபர் கைச் செயினை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

சாலையில் கேட்பாரற்று கிடக்கும் பணம், விலை உயர்ந்த பொருள்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்து அறிவுரை கூறினர். அதன்பிறகு மீட்கப்பட்ட கை செயினை மணிவண்ணனிடம் போலீஸார் ஒப்படைத்தனர். சிசிடிவி உதவியால் கை செயினை கண்டறிந்த கண்ணகி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸாருக்கு உயரதிகாரிகள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு