Published:Updated:

`8 மாதங்களில் 659 பேர் உயிரிழப்பு' : `ஹெல்மெட் அணியாவிட்டால்...' - எச்சரிக்கும் போலீஸ்!

சென்னையில் கடந்த எட்டு மாதங்களில், சாலை விபத்துகளில் 650 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் ஹெல்மெட் அணியாததால் 126 பேர் உயிரிழந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை மாநகரில் விபத்துகளையும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து விதிகளை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

1.1.2021-ம் தேதி முதல் 7.9.2021-ம் தேதி வரை விபத்து தரவுகளை ஆய்வு செய்ததில், சென்னை மாநகரில் விபத்துகளில் 659 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 3,325 பேர் காயமடைந்திருக்கின்றனர். இருசக்கர வாகன விபத்துகளில் 173 பேர் (26 சதவிகிதம்) உயிரிழந்திருக்கின்றனர். 1,214 பேர் (37 சதவிகிதம்) காயமடைந்திருக்கின்றனர். பைக் விபத்துகளில் உயிரிழந்த 126 பேர், காயமடைந்த 1,056 பேர் ஹெல்மெட் அணியவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

கட்டாய ஹெல்மெட் உத்தரவு
கட்டாய ஹெல்மெட் உத்தரவு
சாலையில் வீலிங், பைக் ரேஸ்; வாகனங்கள் பறிமுதல்; வழக்கு பதிவுசெய்த போலீஸ்!

அதனால் ஹெல்மெட் அணிவதை வாகன ஓட்டிகள் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது குறித்து கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னையிலுள்ள முக்கியமான பத்து சிக்னல்களில் நடந்த ஆய்வில் 72 சதவிகிதத்தினர் மட்டுமே ஹெல்மெட் அணிவது தெரியவந்தது. அதனால் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்கும் மனப்பான்மையைக் கொண்டுவரவும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதோடு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. மொத்தம் 3,58,548 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 1,29,240 வழக்குகள் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த நடவடிக்கையால் சென்னையில் ஹெல்மெட் அணிவோர்களின் சதவிகிதம் 86-ஆக உயர்ந்திருக்கிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்லும் சூழல் ஏற்படும். அதனால் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பயணிகளும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்வதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அதேநேரத்தில் வழக்கம்போல வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன. போலீஸாரின் இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கட்டாய ஹெல்மெட் டு டிக்டாக் தடை... நீதிபதி கிருபாகரன் `மக்கள் நீதிபதி' என்று கொண்டாடப்படுவது ஏன்?!
போலீஸாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
போலீஸாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

இது குறித்து சென்னை போக்குவரத்துப் பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது. ``சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறிய முக்கியமான சிக்னல்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் விதிகளை மீறுபவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. சென்னையிலுள்ள முக்கியமான சிக்னல்களிலும் ஆங்காங்கே போக்குவரத்து பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்பட்டுவருகிறது. இனிமேல் சென்னையில் பைக்கில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்லும் சூழலை ஏற்படுத்த வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். அபராதத்துக்கு பயந்து பைக்கில் செல்பவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கட்டாயமாக ஹெல்மெட் அணியுங்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு