Published:Updated:

`அப்பா ஆசையாய் வாங்கிக் கொடுத்த பைக்; மாயமான பணம்'- திருட்டுப் பழியால் விபரீத முடிவெடுத்த இளைஞர்

திருட்டு போன பைக்
திருட்டு போன பைக்

அப்பா, ஆசையாக வாங்கிக் கொடுத்த பைக் திருடுபோன நாளிலிருந்து மனவேதனையிலிருந்த சென்னை இளைஞர் மீது திருட்டுப் பழியும் விழுந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புரசைவாக்கம், தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி (53). இவர், வேப்பேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். எனக்கு வள்ளி, தியாகராஜன், நாகரத்தினம் என 3 பிள்ளைகள். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலையில் வள்ளி இறந்துவிட்டார். 8 மாதங்களுக்குமுன் என் கணவர் ரவிச்சந்திரன் இறந்துவிட்டார். என்னுடைய இளைய மகள் நாகரத்தினத்துக்குத் திருமணமாகிவிட்டது.

தியாகராஜன்
தியாகராஜன்
`சந்தேகம் இருந்தால் மருந்தை சாப்பிட்டுப் பாருங்கள்' -சவால்விட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

என்னுடைய ஒரே மகன் தியாகராஜன் (21) டவுட்டன் அருகில் செல்போன் கடையில் வேலை செய்து வந்தான். அவனுக்கு மது குடிக்கும் பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்தது. அவன் கோபப்படும்போது சில நேரங்களில் தனக்குத்தானே கையை அறுத்துக் கொள்வான். கடந்த மாதம் 5-ம் தேதி அவனுடைய டூவிலர் காணாமல் போய்விட்டது. அதிலிருந்து அவன் மனஉளைச்சலோடு இருந்தான்.

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தான். நாங்கள் அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டோம். பின்பு 6.5.2020 காலை 6 மணிக்கு என் தம்பி பாபு என் மகனைப் பார்த்துள்ளார். அவன் மாடியில் தூங்கப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளான்.

Representational image
Representational image

பின்னர் காலை 10.30 மணியளவில் என்னுடைய இளைய தம்பி சுபாஷ் ஓடிவந்து தியாகராஜன் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார். உடனே நாங்கள் சென்று பார்தோம். அவனுக்கு திருமணமாகவில்லை. அவனின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு அடக்கம் செய்து எங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். புகாரில், பைக்கை திருடிய நபர்களைக் கண்டுபிடித்து இதுபோன்ற செயல் நடக்காமல் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் மீனாட்சி கூறியுள்ளார்.

புகாரின்பேரில் உதவி கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குப்பதிந்து விசாரித்துவருகிறார். பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு தியாகராஜனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் பைக் திருட்டு போனதால் தியாகராஜன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று வேப்பேரி போலீஸார் கூறுகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வேப்பேரி போலீஸார், ``தியாகராஜனின் பைக் திருட்டு போனதும் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதில், பைக்கின் விலை ஒரு லட்சத்துக்கு மேல் என்று குறிப்பிட்டிருந்தார்.

`திருடுபோன பிஃஎப் பணம்; ரகசிய நம்பருக்காக சித்ரவதை!’ -செக்யூரிட்டிக்கு நேர்ந்த சோகம்

பைக் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு பாதுகாப்புப் பணியால் பைக் திருட்டு வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. பைக் திருடப்பட்டு ஒரு மாதங்கள் கடந்த நிலையில்தான் தியாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆனால், வேப்பேரி சரகத்தில் போலீஸாருக்கு இடையே உள்ள மோதல் காரணமாக இந்த வழக்கை திசைதிருப்பி வருகின்றனர்.

ஆனால் தியாகராஜன் தற்கொலை செய்வதற்கு முன் அவரின் உறவினர் ஒருவரின் பணம் காணாமல் போய் உள்ளது. உடனே அந்த நபர், நெய் விற்ற பணத்தை தியாகராஜன் எடுத்ததாக சந்தேகப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுதொடர்பாக வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தியாகராஜன் வேலைக்குச் செல்லவில்லை. மாடிக்குச் சென்ற அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த அறையில் எந்தவித தற்கொலைக் கடிதமும் சிக்கவில்லை. அவரின் செல்போனில் ஏதாவது தடயங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.

தமிழகத்தில் 580 பேருக்கு கொரோனா தொற்று – சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை #NowAtVikatan

``தியாகராஜனின் அப்பா ரவிச்சந்திரனின் குடும்பத்தினர் காப்பகம் நடத்திவருகின்றனர். அதை ரவிச்சந்திரன் கவனித்து வந்துள்ளார். மேலும் வாட்டர் கேன் பிசினஸும் செய்து வருகின்றனர். தியாகராஜன் ஆசைப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேல் விலை உள்ள பைக்கை ரவிச்சந்திரன் வாங்கிக் கொடுத்துள்ளார். பைக் வாங்கிக் கொடுத்த சில மாதங்களிலேயே அவர் இறந்துவிட்டார். அப்பா இறந்த பிறகு தியாகராஜன் அந்தப் பைக்கை மிகவும் நேசித்துவந்தார். அந்தப் பைக் திருட்டு போன நாளிலிருந்தே அவர் விரக்தியில் இருந்தார்" என்று தியாகராஜனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு