Published:Updated:

சென்னை: `பிரச்னை இல்லாத உலகத்துக்குச் செல்கிறேன்!' - துப்பாக்கியால் சுட்டு அதிகாரி தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட அதிகாரி  ஸ்ரீஜன்
தற்கொலை செய்துகொண்ட அதிகாரி ஸ்ரீஜன்

சென்னையிலுள்ள அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட அதிகாரி ஸ்ரீஜன், இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார்.

சென்னை, பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் குடியிருந்தவர் ஸ்ரீஜன் (50). இவர், பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் படையின் 77-வது பட்டாலியனில் துணை கமாண்டன்ட்டாக (Commandant) பணியாற்றினார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த ஸ்ரீஜன் தனது அறைக்குச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

துப்பாக்கி
துப்பாக்கி

உடனடியாக பணியிலிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். ரத்த வெள்ளத்தில் ஸ்ரீஜன் கீழே விழுந்து கிடந்தார். அவரின் துப்பாக்கியிலிருந்த குண்டு ஸ்ரீஜனின் உடலை துளைத்திருந்தது. இதையடுத்து அவரை மீட்டு போரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீஜன், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அதிகாரி ஸ்ரீஜனின் அறைக்குச் சென்ற போலீஸார் அங்கு சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீஜன் என கையெழுத்திட்ட ஒரு கடிதம் சிக்கியது. `மரியாதைக்குரிய ஆன்டணி ஜென்சன் சார்...’ என்று தொடங்கிய அந்தக் கடிதத்தில், ``நான் இந்த வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. பிரச்னைகள் இல்லாத உலகுக்குச் செல்கிறேன். நீங்களும் இந்த பட்டாலியன் பிரிவிலிருந்த சக ஊழியர்களும் எனது நலனில் அக்கறை கொண்டிருந்தீர்கள். அதற்கு உங்களுக்கு என் நன்றிகள்.

தற்கொலைக் கடிதம்
தற்கொலைக் கடிதம்
சென்னை டு ஆந்திரா புல்லட் பயணம்! - ஐடி நிறுவன ஊழியர் கஞ்சா வியாபாரியாக மாறியது எப்படி?

எனது மரணத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரும் காரணமல்ல. என்னுடைய தனிப்பட்ட பிரச்னையே என் முடிவுக்குக் காரணம். எனக்கு ஒரு கடைசி ஆசை இருக்கிறது. எனது உடலை சென்னையில்தான் அடக்கம் செய்ய வேண்டும். என் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். என்னை உங்கள் தம்பிபோல் நினைத்து, என்னை மன்னித்துவிடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சென்னையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு