Published:Updated:

சென்னை: பிரபல ரௌடியைக் காட்டிக் கொடுத்த பெண்! - சரமாரியாக வெட்டிக் கொன்ற எதிர்டீம்

சென்னையில் பிரபல ரௌடி, தோழி வீட்டிலிருந்தபோது சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை மேடவாக்கம், சந்தோஷ்புரம், விக்னராஜபுரத்தைச் சேர்ந்தசர் நாகூர்மீரான் (29). ஆதம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான நாகூர்மீரான் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 15 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். கடந்த 14-ம் தேதி நாகூர் மீரான், ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் 3-வது தெருவில் உள்ள லோகேஸ்வரி என்பவரின் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் லோகேஸ்வரியின் வீட்டுக்குள் புகுந்து நாகூர்மீரானை வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட நாகூர்மீரான்
கொலை செய்யப்பட்ட நாகூர்மீரான்

ரௌடி நாகூர் மீரானைக் கொலை செய்த வழக்கில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சீனு என்கிற சீனிவாசன் (39), சாமுவேல் (22), காணிக்கைராஜ் (23), விமல்ராஜ் (23), பிரபாகரன் (23), கார்த்திக் (26) ஆகிய 6 பேரை 15-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராபின் (27) பவுல்ராஜ் (22), லோகேஸ்வரி (27) ஆகிய மூன்று பேரை 16-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் நாகூர்மீரானுக்கும் ராபினுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராபின் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 15 வழக்குகள் உள்ளன.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸார் கூறுகையில் ``ஆதம்பாக்கம் பகுதியில் ரௌடி நாகூர் மீரான் தரப்புக்கும் ரௌடி ராபின் தரப்புக்கும் இடையே அடிக்கடி முன்விரோதம் காரணமாக மோதல் நடந்து வந்தன. நாகூர்மீரான், ஏற்கெனவே கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவந்தார். தற்போது நாகூர்மீரானுக்கும் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஸ்வரிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அதனால் அவரின் வீட்டுக்கு நாகூர்மீரான் வந்துச் செல்வார். இந்தத் தகவலை மோப்பம் பிடித்த ரௌடி ராபின் தரப்பு, நாகூர்மீரானைக் கொலை செய்ய திட்டமிட்டது.

சென்னை: ரூ.10,000 மதிப்பிலான செல்போனுக்காக ரௌடி கொலை! -  சிக்கிய நண்பர்
ரௌடி ராபின்
ரௌடி ராபின்

சம்பவத்தன்று லோகேஸ்வரியின் வீட்டுக்கு நாகூர் மீரான் வந்த தகவலை ராபின்தரப்புக்கு லோகேஸ்வரி தெரிவித்தார். உடனடியாக வீட்டை சுற்றி வளைத்த ராபின் தரப்பு அவரைக் கொலை செய்துவிட்டு தப்பியது. இந்தச் சம்பவம் தொடர்பாக நாகூர்மீரானின் சகோதரர் கொடுத்த புகாரின்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து ராபின் உள்பட அவரின் கூட்டாளிகளை கைது செய்திருக்கிறோம். நாகூர் மீரான் வந்த தகவலை ராபின் தரப்புக்கு கூறிய குற்றத்துக்காக லோகேஸ்வரியையும் கைது செய்துள்ளோம். நாகூர் மீரான் கொலை செய்யப்பட்டதையடுத்து அவரின் தரப்பினர் அம்பேத்கர் நகரில் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். டூவிலர், துணிகளையும் வீட்டின் உபயோகபொருள்கள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்திவிட்டனர். அதைத் தடுக்க முயன்ற பொதுமக்களையும் கத்திக்காட்டி மிரட்டியிருக்கின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நாகூர்மீரான் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு