Published:Updated:

சென்னை: `5 மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம்!' - ரவுடியை ஓட ஓட விரட்டி கொலைசெய்தக் கும்பல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரவுடி தாமோதரன் என்கிற செல்லகுஞ்சு
ரவுடி தாமோதரன் என்கிற செல்லகுஞ்சு

சென்னையில் ரவுடிக்கும் ஆட்டோ டிரைவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆட்டோ டிரைவரை ரவுடி தாமோதரன் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ரவுடி தாமோதரன் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியைச் சேர்ந்தவர் தாமோதரன் என்கிற செல்லகுஞ்சு (31). இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி நகர் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே நேற்றிரவு தனியாக நடந்து சென்றார்.

கொடுங்கையூர் காவல் நிலையம்
கொடுங்கையூர் காவல் நிலையம்

அப்போது தாமோதரனை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 4 பேர், அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் தாமோதரனை வெட்டினர். அவர்களிடம் தப்பிக்க தாமோதரன் ஓட்டம் பிடித்தார். ஆனால், ஓட ஓட அந்தக் கும்பல் அவரை வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவம் குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் மற்றும் போலீஸார் வந்து விசாரித்தனர். பிரேதப் பரிசோதனைக்காக ரவுடி தாமோதரனின் சடலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா
ரவுடி தாமோதரன் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது எங்களின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சிக்கினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்
போலீஸ்

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள், கொலையாளிகள் வந்த பைக்கின் பதிவு நம்பர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில் கொலையாளிகள் தலைமறைவாக இருக்கும் இடம் குறித்து தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்றபோது கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ``ரவுடி தாமோதரனுக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தாமோதரன், ஆட்டோ டிரைவரை வெட்டினார். இதுதொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் ரவுடி தாமோதரன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை:`டயர் தொழிற்சாலை இடப்பிரச்னை!' - ரியல் எஸ்டேட் அதிபர் கொடூர கொலை
கொலை
கொலை
Representational Image

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆட்டோ டிரைவர் உயிர்பிழைத்தார். இந்தச் சூழலில்தான் ரவுடி தாமோதரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் இந்தக் கொலையில் ஆட்டோ டிரைவரின் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சிக்கினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

கொடுங்கையூரில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு