Published:Updated:

சென்னை: பிரபல ரௌடியின் மகன் ஓட ஓட விரட்டிக் கொலை - வைரலாகும் சிசிடிவி காட்சி

கொலை செய்யப்பட்ட ரௌடியின் மகன் பாலு
கொலை செய்யப்பட்ட ரௌடியின் மகன் பாலு

சென்னையில் பிரபல ரௌடியின் மகன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

சென்னை, கொருக்குப்பேட்டை, அம்பேத்நகர் நகரைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி விஜயன். இவரின் மகன் பாலு (30). இவர் நேற்றிரவு வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மக் கும்பல், பாலுவை கத்தியால் வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்த தப்பி, தெருவுக்குள் பாலு ஓடினார். ஆனால் விடாடல் துரத்திய மர்மக் கும்பல், பாலுவை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பித்தது. அதைப் பார்த்த பொதுமக்கள் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர். தெருவில் ரத்த வெள்ளத்தில் பாலு சடலமாகக் கிடந்தார். இது குறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை
கொலை
Representational Image

போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, பாலுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், பாலுவை ஓட ஓட விரட்டிக் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீஸார் கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

இது குறித்து ஆர்.கே.நகர் போலீஸார் கூறுகையில், ``பாலுவின் தந்தை விஜயன், கடந்த பத்து ஆண்டுகளாக வடசென்னையில் தாதாவாக வலம் வந்தார். சமீபத்தில் அவர் உயிரிழந்தார். விஜயனுக்குப் பிறகு பாலு தாதாவாகிவிடக் கூடாது என்று ஒரு கும்பல் முடிவு செய்தது. ஆட்டோ ஓட்டிவந்த பாலு மீதும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. பாலுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரௌடி கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.

கொலை
கொலை
representational image
சென்னை:`அக்காவுக்கு ஜூஸ்; மாமாவுக்கு விஷம்!' - சொத்துக்காகக் கொலை... சகோதரிகள் சிக்கிய பின்னணி

அதனால் விஜயன் இறந்ததும், பாலுவை அந்தக் கும்பல் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம். கொலை செய்யப்பட்ட பாலுவுக்கு நாகலட்சுமி (28) என்ற மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள்" என்றனர்.

பாலு கொலை செய்யப்பட்டபோது சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு